306 பூர்ணசந்திரோதயம்-2
வெளிப்படுத்தினர். ஆனால், அந்தச்சமயத்தில் அம்மாளு என்ற பெண் அவனைப் பார்த்த பார்வை நிரம்பவும் கனிந்து நைந்ததாகவும் மோகக் குறிப்பை நன்றாக உணர்த்துவதாகவும் இருந்தது. அதை உணர்ந்த கலியாணசுந்தரம் நிரம் பவும் வியப்பும், சங்கடமும், அருவருப்பும் அடைந்தவனாய், அவள் என்ன கருத்தோடு தன்னை அவ்வாறு பார்த்தாள் என்பதை நிச்சயித்துக் கொள்ளும் பொருட்டு, சிறிதுநேரம் அவளது முகத்தைக் கூர்ந்து நோக்க வேண்டியிருந்தது. ஆனால், அவன் அவ்வாறு உற்று நோக்கிய காலத்தில் அந்தப்பெண் நிரம்பவும் கிலேசமடைந்து தனது முகத்தைக் கீழே கவிழ்த்துக் கொண்டாள். அவளது முகம் வெட்கத்தினால் மாறுபட்டதன்றி சிறிதும் கப்ட மற்றதாகவும் காணப்பட்டது. அவளைப் பற்றித் தான் கொண்ட எண்ணம் தவறானது என்று உடனே எண்ணிக் கொண்ட நமது யெளவனப் புருஷன் அவளை அவ்வாறு உற்று நோக்கியதைப் பற்றி நிரம் பவும் விசனமும் கிலேசமும் அடைந்தான். ஆனால், அவள் அதன் பிறகு பற்பல விஷயங்களைப் பற்றி நிரம் பவும் சந்தோஷமாகவே பேசிக்கொண்டு போனதன்றி அவனிடத்தில் எப்போதும் போன்ற பட்சமும் மரியாதையும் காட்டிஃப் பேசிக் கொண்டே இருந்தாள். ஆகையால், தான்கூர்ந்து நோக்கியதைப் பற்றி அவள் தன்மீது ஆயாசம் அடையவில்லை என்று அவன் யூகித்துக் கொண்டான். அதுவுமன்றி, தான் அப்படிப்பட்ட அற்ப விஷயங்கள் எல்லாம் அவர்களின்மேல் அருவருப்பும் அதிருப்தியும் கொள்ளத் தொடங்கினால், தான் கோரி வந்த காரியம் நிறைவேறாது என்ற எண்ணமும் தோன்றியது. ஆகையால், தான் அப்படிப்பட்ட அற்ப விஷயங்களை யெல்லாம் கவனியாமல் பெரும் போக்காக நடந்து, அவர்களது பிரியத்தையும் சிநேகத்தையும் முதிரச் செய்ய வேண்டும் என்று உறுதி செய்து கொண்டான். ஆகையால் அவன் அவர்களது மன்போக்குக்கு ஒத்தபடி அன்னியோன்னிய மாகவும் சந்தோஷமாகவும் சம்பாவித்து வந்தான்.
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/320
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
