பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 307 ஆகவே, அவர்கள் நெடுந்துாரம் பிரயாணம் செய்து அன்றைய தினம் பகல் இரண்டு மணிக்கு ஒரு சத்திரத்தில் தங்களது பகற் போஜனத்தை முடித்துக்கொள்ள இறங்கிய காலத்திற்குள் அவர்கள் ஸரஸ்மாகவும் சந்தோஷமாகவும் பேசத் தலைப்பட்டு விட்டனர். அன்று சாயுங் காலம் வேறொரு தாமரைக் குளத்தண்டைதங்களது இராப்போஜனத்தை முடித்துக்கொள்ள இறங்கிய காலத்துக்குள், அவர்கள் அவனோடு குழந்தைப் பருவத்திலிருந்து அன்னியோன்னியமாகப் பழகிய தோழர்கள் போல நடந்து கொண்டனர். ஆனால், அம்மாளு என்ற மூத்த பெண் பல தடவைகளில் அவனைப் பார்த்த நைவான கபடப் பார்வையைக் கண்டு, நமது கலியாணசுந்தரம் ஆயாசம் அடைந்தான். ஆனால், அவள் கபடமாக அவனைப் பார்க்கும் காலத்தில், அவனும் அவளைப் பார்த்தால், அவள் உடனே சடக் கென்று வேறு திக்கில் தனது பார்வையைத் திருப்பிக் கொண்டு ஒன்றையும் அறியாதவள் போல இருந்து விடுவாள். அதைக் கண்ட கலியாணசுந்தரம் தனக்குள் ஒருவித உறுதி செய்து கொண்டான். உண்மையிலேயே அவள் தனது விஷயத்தில் அவ்வளவு சொற்ப காலத்திற்குள் ஏதாவது தவறான எண்ணம் கொண்டிருந்தாலும், மற்றவர்கள் இருக்கையில் அவள் இதை இன்னம் அதிகமாக வெளியில் காட்டிக்கொள்ள மாட்டாளென்று உறுதி செய்து கொண்டான். தாமரைக் குளத்தடியில் அவர்கள் தங்களது இராப்போஜனத்தை முடித்துக்கொண்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டனர். அதற்கு அப்பால் அவர்கள் சில காத தூரம் பிரயாணம் செய்து வழியிலிருந்த உதயகிரி என்ற ஊரை அடைந்து அவ்விடத்திலுள்ள சத்திரத்திலே அன்றிரவு முழுதும் படுத்து இராப்பொழுதைக் கழிக்க வேண்டியிருந்தது. ஆகையால், பெட்டிவண்டி விசையாக ஓடத் தொடங்கியது. சூரியன் மேற்குக் கடலில் மறைந்து போய்விட்டான். அவர்கள் போய்க்கொண்டிருந்த பாதையின் இரண்டு பக்கங்களிலும்