பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O8 பூர்ணசந்திரோதயம்-2 பெருத்த பெருத்த ஆலமரங்கள் பத்திபத்தியாக வளர்ந்து ஆகாயத்தை அளாவிப் பந்தல் போல் இருந்தன. ஆகையால் அந்தப்பாதை இருள் அடர்ந்ததாகக் காணப்பட்டது. அப்போது முத்துலக மியம் மாளினது மனசில் ஒருவிதமான அச்சம் உண்டாகத் தொடங்கியது. அப்படிப்பட்ட இருள் அடர்ந்த நிருமாதுஷ்யமான பாதையில் தாங்கள் அந்த இரவில் போகும்போது திருடர்கள் ஒருவேளை தோன்றித் தங்களை அடிப்பார்களோ என்ற திகில் உண்டாகிப் பெருகிக் கொண்டே இருந்தது. ஆனாலும், அதை வெளியில் காட்டாமல் மறைத்துக் கொள்ளும் பொருட்டு அவள் எப்போதும் போலக் கலியாணசுந்தரத்தினிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அபிராமி என்ற கடைசித் தங்கை அன்று பகல் முழுதும் பிரயாணம் செய்ததனால் அலுத்துப்போய் அயர்ந்து உறங்கி ஒரு பக்கமாகச் சாய்ந்து விட்டாள். கலியாணசுந்தரம் முத்துலக்ஷ்மி யோடும், தனது இடது பக்கத்தில் இருந்த தனம் என்பவளோடும் சம்பாஷணை செய்து கொண்டே இருக்க நேர்ந்தது. ஆனால், மூத்தவளான அம்மாளு என்பவள் தானும் பேசுவதைப் படிப்படியாக நிறுத்திக்கொண்டே வந்து கடைசியாக ஓய்ந்து முற்றிலும் மெளனம் சாதிக்கத் தொடங்கினாள். பெட்டிவண்டிக்குள் அவர்கள் உட்கார்ந்திருந்த இடம் முழுதும் ஒரே கருப்பாக இருண்டுபோய்விட்டது. முத்துலக மி யம்மாள் திருடர்கள் வந்து வழிமறித்து அடிப்பார்கள் என்ற பயத்தை அடிக்கடி வெளியிட்டு வந்தாள் ஆகையால், கலியாணசுந்தரம் தைரியமான வார்த்தைகளைச் சொல்லி அடிக்கடி அவளை ஊக்கிக்கொண்டே வரவேண்டியிருந்தது. அதோடு, அந்தத் துன்பம் ஒருபுறமிருக்க அவன் ஆயாசம் அடைய இன்னொரு புதிய காரணமும் ஏற்பட்டது. என்னவென்றால், அவனுக்கு வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த