பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் S09 மூத்த பெண்ணான அம்மாளுவினது தலை சோர்ந்து ஆடி ஆடி அவனது தோளில் வந்து பட ஆரம்பித்தது. அன்னிய மாதரிடத்தில் அவன் நிரம் பவும் மரியாதையும் பயிர்ப்பும் பாராட்டும் குணமுடைய மகா உத்தம புருஷன். ஆகையால், அந்தப் பெண்ணின் உடம்பு தன் மீது பட்டது அவனால் சகிக்க இயலாத துன்பமாக இருந்தது. அப்படி இருந்தாலும், அவள் காலையிலிருந்து பிரயாணம் செய்வதனால் அலுத்து அயர்ந்து தூங்குகிறாள் என்று நினைத்து, அவன் அவளிடத்தில் இரக்கங்கொண்டு அவளை எழுப்பக் கூடாது என்று நினைத்துப் பொறுமையை வகித்திருந்தான் இன்னம் கொஞ்ச நேரம் கழிய, அவளது தலை மெதுவாய் நகருவதாகத் தோன்றியது; பிறகு சிறிதுநேரம் அசைவற்று நின்றது. பிறகு கொஞ்சநேரம் அவள் தனது முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டு முன்போலத் தூங்கி ஆடிவிழுந்தாள். அப்போது அவளது கன்னம் அவனது கன்னத்தில் போய் உராயத் தொடங்கியது. அதைக் கண்ட அந்த யெளவனப் புருஷன் திடுக் கிட்டான். ஆனால், அவளது தூக்கத்தை யாவது அவளது முகம் இருந்த நிலைமையையாவது கெடுக்கும்படியாக அவ்வளவு அதிகமாக அவன் நகரவில்லை. இருந்தாலும், அவன் தனது உடம்பை மாத்திரம் சொற்பமாக இடது பக்கத்தில் நகர்த்திக்கொண்டான். அப்போது, அவளது தலை அவனது தோளின்மீது வீழ்ந்துவிட்டது. அந்தச்சமயத்தில் முத்துலக்ஷ்மி பேசாமல் மெளனம் சாதித்துக் கொண்டிருந்தாள் ஆகையால், அம்மாளு என்பவள் உண்மையிலேயே தூங்குகிறாளாஎன்பதை அறிய வேண்டும் என்ற எண்ணத்தோடு அந்தச் சிறுவன் அவளது மூச்சின் ஒசையைக் கவனித்துக் கேட்கத் தொடங்கினான். தூங்கிக் கொண்டிருப்பவளுடைய வாயிலிருந்து உண்டாகும் ஒசை அவளது வாயிலிருந்து உண்டாகவில்லை. அதைக்கொண்டு, கலியாணசுந்தரம் அவள் தூங்கவில்லை என்றும் வேண்டுமென்றே மனதார அவள் அப்படிப்பட்ட மதியினமான காரியத்தைச் செய்கிறாள்