310 பூர்ணசந்திரோதய்ம்-2 என்றும் நிச்சயித்துக் கொண்டவனாய், அவளது துணிகரமான செய்கையைப் பற்றி பிரமிப்படைந்தவனாய், கொஞ்சம் இடது பக்கமாக நகர்ந்து கொண்டான். அப்போது அம்மாளுவினது தலை அவனது தோளைவிட்டு விலகவேண்டி இருந்தது. ஆகையால், அந்த மடந்தை அப்போதே கடுந் துயிலிலிருந்து விழித்துக்கொள்கிறவள்போலப் பாசாங்கு செய்து, 'உஸ், அப்பாடா!' என்று நிமிர்ந்து உட்கார்ந்து தனது கண்களைத்
துடைத்துக் கொண்டாள்.
அதைக் கண்ட கலியாணசுந்தரம் மறுபடியும் திகைப்படைந்து அவள் உண்மையிலேயே தூங்கி விழித்தாளா, அல்லது, பொய்யாக அப்படி நடக்கிறாளா என்பதை நிச்சயிக்க மாட்டாமல் தவிக்கலானான். அவனது சுபாவம் பிறர் விஷயத்தில் எளிதில் தப்பான அபிப் பிராயம் கொள்ளாத சுபாவம். ஆதலால், அந்தப்பெண் உண்மையிலேயே தூங்கி விழித்திருக்க வேண்டும் என்றே அவன் கடைசியில் தன் மனதில் நிச்சயப்படுத்திக்கொண்டான். ஆனால், அவர்களது தங்கையான சிவபாக்கியம், அவர்களது குணத்தைப் பற்றிச் சொல்லியிருந்த வரலாறுகள் அப்போது நினைவுக்கு வந்தன. ஆகையால், அவள் தன் விஷயத்தில் தவறான எண்ணம் கொண்டு வேண்டுமென்றே அப்படி நடக்கிறாளா என்ற சந்தேகமும் இடையிடையில் தோன்றிக் கொண்டிருந்தது. அதை இன்னது என்று நிச்சயிக்க மாட்டாமல் அவன் சிறிது நேரம் தத்தளித்தபின், தான் அப்பேர்ப்பட்ட சம்சயமான நடத்தையுடைய மனிதர்களோடு பழகிப் பிரயாணம் செய்ய நேர்ந்ததே என்று நினைத்து ஒருவாறு வருந்தியவனாய் இருந்த காலத்தில் மறுபடியும் அவனுக்கு இன்னொரு விதமான துன்பம் நேர்ந்தது. அவன் அம்மாளு தனம் என்ற இரண்டு மங்கையருக்கும் நடுவில் உட்கார்ந்திருந்தான் என்பது முன்னரே சொல்லப்பட்ட விஷயம். அம்மாளு என்பவள் துரங்கித் தூங்கி ஆடி ஆடி விழுந்து தோளின் மீது தலையை வைத்தும்,
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/324
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
