பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/325

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர்கே.துரைசாமி ஐயங்கார் 3.11 தன்னத்தின் மீது கன்னத்தை வைத்தும் அவனை வருத்திய காலத்தில், அவன் அதைச் சகிக்க மாட்டாமல் தனது இடது பக்கத்தில் சிறிது சிறிதாக நகரவேண்டியது அவசியமாக இருந்தது. அப்படி அவன் அருவருப்போடு விலகி விலகி நகர்ந்த காலத்தில் அவனது ஆடைகள் அவனுக்குத் தெரியாமல் இளையவளான தனம் என்னும் பெண்ணின் மீது உராயத் தொடங்கியது. கடைசியில் அவன் தனத்திற்கு அருகில் நெருங்கி உட்கார்ந்து கொள்ள நேர்ந்தது. மூத்த பெண் அப்படி இழிவாக நடந்து கொள்ளுகிறாளே என்ற நினைவினால், அவனது மனம் குழம்பித் தத்தளித்துப் போனது. ஆகையால், தனது வஸ்திரம் இடது பக்கத்தில் இருந்த இளைய பெண்ணின் மீது படுகிறது என்பதை அவன் உணரவில்லை. ஆனால், அதிலிருந்து இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. அவனது இடது பக்கத்தில் இருந்த தனம் என்பவள், அந்த யெளவனப் புருஷன் தன் மீது மோகங்கொண்டு தன்னிடம் நெருங்கி வந்து அவ்வாறு சைகை செய்கிறான் என்று நினைத்துக் கொண்டாள். சிறிது நேரம் வரையில் அவனது வஸ்திரம் அவளது உடம்பில் பட்டதன்றி இரண்டொரு தரம், அவனது உடம்பும் அவளது உடம்பில் பட்டது. படவே அவளது உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உரோமம் சிலிர்க்க, சகிக்க இயலாத பேரின்ப சுகம் பரவியது. அந்த யெளவனப் புருஷன் வேண்டும் என்றே அப்படிச் செய்கிறானா, அல்லது அது தற்செயலாக நேர்ந்த சம்பவமோ என்பதை நிச்சயிக்க மாட்டாமல், அந்தப் பெண் சந்தேகமும் சஞ்சலமும் அடைந்து தான் என்ன செய்வது என்பதை அறியமாட்டாமல் அப்படியே ஸ்தம்பித்து அசைவற்று மெளனமாக இருந்து அவனது உடம்பின் அசைவை உற்றுக் கவனித்துக்கொண்ட வண்ணம் உட்கார்ந்திருந்தாள். - கடைசியாக அம்மாளுவின் ಹ6767t, அவனது கன்னத்தில் பட்டகாலத்தில், அவன் நன்றாக நகர்ந்தபோது, அவனது தேகம்