பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/326

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


312 பூர்ணசந்திரோதயம்-2 தனத்தின்மீது நன்றாகப் படவே, அவன் வேண்டுமென்றே தன்னிடம் நகர்ந்து வருகிறான் என்ற எண்ணம் தனத்தின் மனதில் உண்டாயிற்று. உடனே அவளது உடம்பிலுள்ள இரத்தம் முழுதும் கொந்தளித்துப் பொங்கி எழுந்து தாண்டவம் ஆடியது. ஆகையால், அவளால் சிறிதும் தாங்க முடியாத மோகலாகிரியும், ஆவேசமும் உண்டாகிவிட்டன. அவனைப் பிடித்து ஆவலோடு அணைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஒருவித எண்ணம் மூர்க்கமாக கிளம்பி அவளை வதைத்தது. இருந்தாலும், தான் அவனது மனப்போக்கை உள்ளபடி உணர்ந்து கொள்ளாமல் அவ்வளவு துணிகரமான காரியத்தில் உடனே இறங்கக் கூடாது என்ற நினைவினால் தன்னை ஒருவாறு அடக்கிக்கொண்ட தனம், மெதுவாகத் தனது மார்பை அவனது பக்கத்தில் திருப்பிக்கொண்டு அவனுக்கு அருகில் நெருங்கி அவனது தாக்கலை எதிர்பார்த்து ஆயத்தமாக இருந்தாள். அவ்வாறு அவள் நெருங்கி இருந்த இடம் நமது யெளவனப் புருஷனது இடம் கை அங்கும் இங்கும் நகரக்கூடிய இடமாகையால், அந்தக் கையை அவன் தற்செயலாகத் தூக்கியபோது, அதுபோய் அவளது மார்பில் தாக்கியது. அவ்வாறு தாக்கவே, தனத்தின் நிலைமை சகிக்க முடியாத பரம இன்பநிலைமை ஆகிவிட்டது. அவள் கட்டுக்கடங்கா ஆவலோடும் இளக்கத்தோடும் அவன் மீது சாய்ந்து கொள்ள, அந்தச் சமயத்தில் மூத்தவள் முன்னே சொன்னபடி தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டவள் போல நடித்தாள். ஆகையால், அதைக் கண்டு திடுக்கிட்ட தனம் அப்பால் விலகிக்கொண்டாள். உடனே கலியாணசுந்தரத்தின் இடதுபக்கத்து உபத்திரவமும் ஒய்ந்தது. ஆனால், இடது பக்கத்திலிருந்த வடிவழகியான தனத்தின் மனதில், சற்றுமுன் நடந்த சைகை, கலியாணசுந்தரத்தினால் வேண்டுமென்று மனதாரச் செய்யப்பட்டது என்ற எண்ணமே வேரூன்றி நின்றது. ஆகையால், தனது அக்காளான அம்மாளு