பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/327

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் S13 மறுபடியும் துயிலில் ஆழ்ந்தபிறகு, அவன் திரும்பவும் தன்னிடத்தில் ஸரஸ் லீலைகள் செய்யத் தொடங்குவான் என்று எதிர்பார்த்தவளாய்ச் சிறிது நேரம் மெளனமாக இருந்தாள். ஆனால், மூத்தவள் முன்போல நமது யெளவனப் புருஷன் மீது துரங்கிவிழாமல், கதவின் மூலையில் சாய்ந்த வண்ணமே உறங்கத் தொடங்கினாள். ஆகையால், அவனுக்கு அப்புறம் இப்புறம் நகருவதற்குப் போதுமான இடம் தாராளமாக இருந்தது. மிகுந்த ஆவலோடு சிறிதுநேரம் பொறுத்துப் பார்த்து தனம் அம்மாள் அதற்குமேல் சும்மாயிருக்க மாட்டாதவளாய், மெதுவாக அவனை நோக்கி நகரத் தொடங்கினாள். ஆனால், அவள் ஒரே முட்டாக நகராமல் ஒர் அங்குலம் நகருவாள்! அவன் முன் போலத் தன்னை நோக்கி வருவானோ என்று எதிர்பார்த்துச் சிறிது ஒய்ந்திருப்பாள்; தனது அக்காள் விழித்துக் கொண்டிருக்கிறாள் என்ற எண்ணத்தினால், அவன் அச்சம் கொண்டு தன்னிடம் நெருங்காமலிருக்கிறான் என்று நினைத்துத் தானே மேலும் ஒர் அங்குலம் நகருவாள். அவ்வாறு கால்நாழிகை நேரம் கழிய, அவள் அவனிடம் நெருங்கி வந்து விட்டாள். அந்தச் சமயத்தில் பாதையிலிருந்த ஒரு பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறியதனால் உண்டான அசைவினால், அவள் அவனது பக்கம் திரும்பியபடி அவன் மீது தாக்கவே, அவளது மார்பின் பக்கம் அவனது புஜத்தில் போய் வேகமாக மோதியது. மோகாவேசத்தினால் வீங்கி வீங்கித் தணிந்து கொண்டிருந்த அவளது மார்பகம் அவனது புஜத்தில் போய் மோதி இன்பகரமான செய்தி சொல்லி வாதுக்கு இழுக்கவே, அப்போதே கலியாணசுந்தரத்துக்கு உண்மை இன்னது என விளங்கியது. தனக்கு இடது பக்கத்திலிருந்த பெண்ணும் தன்னிடம் ஏதோதுர் எண்ணங்கொண்டு அவ்வாறு சைகைகள் செய்கிறாள் என்பது அவனுக்குச் சந்தேகமற விளங்கியது. ஆகவே, அவன் முன்னிலும் அதிகமாகத் திடுக்கிட்டுத்தனது உடம்பைச்சடக்கென்று அப்பால் இழுத்துக்