பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 பூர்ணசந்திரோதயம்-2 மெளனம் சாதித்தனர். முதல் நாள் இரவில் கொசுக்கடி உபத்திரவத்தினால் கொஞ்சமும் தூங்காமலிருந்த முத்து லக மியம்மாள் தனது ஆசனத்தில் உட்கார்ந்தபடி மூலையில் சாய்ந்து உறங்கிக் கொண்டே வந்தாள். கலியாணசுந்தரம் அதே விஷயமாக மேன்மேலும் பேசிக்கொண்டே போனதைக் கண்ட மூத்த பெண்ணான அம்மாள் என்பவள் வேடிக்கையாகவும் புன்னகையோடும் பேசத் தொடங்கி, லலிதகுமாரிதேவியினுடைய விஷயந்தான் நாம் எப்போதும் பேசிப் பேசி அலுத்துப் போன விஷய மாயிற்றே; அதை வைத்துக் கொண்டு நாம் இப்போது பேசி ஏன் விசனப்பட வேண்டும்? வேறே ஏதாவது விஷயத்தைப் பற்றிப் பேசுவோம்' என்றாள். அந்த மூன்று பெண்களும் நல்ல கல்வி முதிர்ச்சியும், கூர்மையான அறிவும், வியவகார ஞானமும், வாக்கு சாதுர்யமும் உடையவர்கள் என்பதை நமது கலியாணசுந்தரம் சந்தேகமறத் தெரிந்து கொண்டான். அவர்கள் பிறரது மனம் கோணாமல் எப்போதும் ஹாசியமாகப் பேசி, சந்தோஷமும் நகைப்பும் உண்டாக்குவதில் மகா நிபுணிகளாக இருந்தன. ரென்பதும் பிரத்தியேகமாகத் தெரிந்தது. மதியினம் நிறைந்த சில பெண் பிள்ளைகளைப் போல அவர்கள் பிறரைப் பற்றிப் பேசி வீண் பொழுது போக்குவதிலும் அவர்களது மனம் செல்லவில்லை. இளவரசரிடத்தில் தங்களுக்குள்ள அந்தரங்க நட்பை அதிகமாகப் பாராட்டிப் பேசிப் பெருமையடித்துக் கொள்ள வேண்டுமென்ற நினைவும் அவர்களுக்கு இல்லை. அவ்வாறு அவர்களிடத்தில் அநேக நற் குணங்கள் இருந்தது என்பது அவனுக்குப் பரிஷ்கார மாகத் தெரிந்தது. ஆனால், அவர்களது தேக பரிசுத்தமும், மனதின் தூய்மையும் எவ்வளவு தூரம் கெட்டிருந்தது என்பது மாத்திரம் அவனுக்கு நிச்சயமாகத் தெரியாதிருந்தது. ஆகையால், அவனது மனம் அதைப்பற்றி நிரம்பவும் தடுமாற்றம் அடைந்தது. இளம்பிராயத்திலிருந்து