பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 317 அவர்களுக்கு நற் புத்தி புகட்டி அவர்களை நல்ல வழியில் திருப்பிவிட்டிருந்தால், அவர்கள் உலகத்துக்கு எவ்வளவு உபகாரமான நல்ல மனிதராக இருப்பார்கள் என்பதை நினைக்கவும் அப்போதும் அவர்கள் தங்களது தாயின் வற்புறுத்தலைத் தடுக்கமாட்டாமல் வேடன் கை அம்புபோலத் தீங்கு இழைக்கும் உபகருவியாக இருந்ததை எண்ணவும், அவனது மனம் அவர்களது விஷயத்தில் மட்டற்ற அநுதாபமும் இரக்கமும் கொண்டு இளகி உருகியது. அவர்களை அந்தக்கொடிய துன்மார்க்கத்திலிருந்து தான் மீட்டு நல்வழிப் படுத்தினால், அதைவிடப் பெருத்த புண்ணியமும் புகழும் தனக்கு வேறு எதிலும் கிடைக்க மாட்டாது என உறுதியாக நினைத்து நிரம்பவும் சஞ்சலம் அடைந்தான். அன்றையதினம் பகலிலும், சாயங்காலத்திலும் அவர்கள் இடைவழியில் காணப்பட்ட வசதியான இடங்களில் முதல்நாள் செய்தது போலத் தங்களது போஜனத்தை முடித்துக்கொண்டு மேலும் பிரயாணம் செய்யத் தொடங்கினர். சிறிது நேரத்தில் முன்னிருள் தோன்றி அடர்ந்து வளைத்துக் கொள்ளத் தொடங்கியது. சாலையில் இருந்த ஆலமரங்களின் இருளினால், அந்த இரவின் இருள் நூறு மடங்கு கருத்துக் கரிக்குழம்பு போலக் காணப்பட்டது. அப்படி இருக்க, பெட்டி வண்டியின் உட்புறத்து நிலைமை எப்படி இருந்தது என்பதை வெளியிடுவதே அநாவசியமாகும். பக்கத்திலிருந்த மனிதர் எவ்வளவுதூரத்தில் இருக்கிறார்கள் என்பது சிறிதும் தெரியாமல் இருந்தது அன்றி, எங்கு பார்த்தாலும் ஒரே கருப்பாக இருந்தது. ஆகையால், மரம், மனிதர், வண்டி, குதிரை முதலிய வேறுபாடே தெரிந்து கொள்ள இயலாததாக இருந்தது. கலியாணசுந்தரமோ தனக்கு இரு பக்கங்களிலும் இருந்த வடிவழகியர்களுக்குச் செளகரியக் குறைவு ஏற்படப் போகிறது என்று அஞ்சி அப்புறம் இப்புறம் ஒர் இம்மியளவு கூட நகராமல் தனது தேகத்தையும் கை கால்களையும் ஒடுக்கிக்