பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/333

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 319 இடையில் இருந்து, அப்படிப்பட்ட சைகைகளுக்கு இடம் கொடுத்து மெளனமாகவே இருந்து வந்தால், அவர்கள் மேன்மேலும் துணிவடைந்து அதற்குமேலும் என்னென்ன காரியங்களில் இறங்கி விடுவார்களோ என்றும், தான் அவர்களோடு இருந்து அப்படிப்பட்ட ஆட்சேபகரமான காரியங்களுக்கு இணங்கி இருப்பதைத் தனது காதலியான ஷண்முகவடிவு அறிந்து கொள்வாளானால், அவள் தன்னைப் பற்றி எப்படிப்பட்ட கெட்ட அபிப்பிராயம் கொள்ளமாட்டாள் என்றும் அவன் எண்ணி எண்ணி அளவற்ற சஞ்சலமும் கலக்கமும் கொண்டு நெருப்புத் தணலின் மேல் இருப்பவன்போல வேதனைப்பட்டு உட்கார்ந்திருந்தான். வெகுநேரம் வரையில் அந்தப் பெண்கள் இருவரும் ஊமைச் சாடைகள் காட்டி முயன்று பார்த்ததற்கெல்லாம் எவ்வித உத்தரமும் கிடைக்காமல் போகவே, அவர்கள் இருவரும் ஏக்கமும் ஏமாற்றமும் அடைந்து சோர்வுற்றுப். படிப்படியாகத் தளர்ந்து, தங்களது விஷமங்களை எல்லாம் அடக்கிக்கொண்டு ஒய்ந்து போயினர். நாழிகை ஏற ஏற அவர்களது சம்பாஷணையும் சோர்ந்து தளர்வடைந்து நின்றுபோய்விட்டது. கலியாண சுந்தரத்தைத் தவிர மற்ற எல்லாரும் அலுத்துத் துயிலில் ஆழ்ந்து அப்படி அப்படியே மூலைகளில் சாய்ந்து விட்டனர். அவன் மாத்திரம் தூங்காமல் உட்கார்ந்திருந்தபடி மகா தரும் சங்கடமான தனது நிலைமையைப் பற்றி எண்ணமிடுவதிலேயே தனது முழுமனதையும் கவனத்தையும் செலுத்தினவனாய் உட்கார்ந்தி ருந்தான். அவன் செய்யக் கூடிய காரியங்கள் இரண்டே இரண்டுதான் இருந்தன. அந்த இரண்டில், ஏதாவது ஒன்றை அவன் அவசியம் செய்தே தீர வேண்டியிருந்தது. வசீகரமும் சாகசக்கியமும் நிறைந்த அந்த இனிய மங்கையரை விட்டுப் பிரிந்து தான் விலகிக் கொள்வது ஒரு வழி. அந்த வழியைத் தான் கடைப்பிடித்தால், தான் சிவபாக்கியத்துக்கு வாக்குக் go.II-21