பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/336

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


324 - பூர்ணசந்திரோதயம்-2 அம்மாளு :- (ஆச்சரியத் தோடு) ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? இப்படிப்பட்ட மன்மத புருஷன் தாலிகட்டி ஆயிசுகால பரிபந்தம் புருஷனாக இருப்பது எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய காரியமல்லவே! - தனம்:- (முன்னிலும் அதிகமாக நகைத்து) இவர் நிரம்பவும் கண்டிப்பும், அழுத்தமான மனமும் உடையவராகத் தோன்றுகிறார். ஆகையால், நம்முடைய ஜெபமெல்லாம் இவரிடத்தில் நீடித்துப் பலிக்காது. நாம் அடங்கி ஒடுங்கி அடிமைபோலக் கிடக்க நேரும். பெண்ஜாதியைவிட ஆசைநாயகிக்கு அதிகாரமும், செல்வாக்கும், சுயேச்சையும் அதிகமல்லவா? அம்மாளு;- (செல்லமாகவும் அன்பாகவும் கண்டித்து) ஒகோ! நீ பார்வைக்குப் பூனைபோலவும் ஒன்றையும் கவனியாதவள் போலவும் இருந்தாய்; ரகசியத்தில் என்னென்னவோசங்கதிகளையெல்லாம் தெரிந்து கொண்டிருக் கிறாயே! நீ எப்போதும் திருட்டு ஆசாமி! அவரிடம் நீ ஏதோ விஷமம் பண்ணிப் பார்த்திருக்கிறாய் போலிருக்கிறது. தனம் :- (கபட நகை நகைத்து) நீ மாத்திரம் நிரம்பவும் ஸ்ாதுவோ! உனக்கு ஒன்றும் தெரியாதோ இந்த விஷயத்தில் உன் மனம் அதிகமாகச் சென்று லயித்திருப்பதனாலேதான் நீ இந்த விஷயத்தில் என்னை ஆழம் பார்க்கிறாய்? நீ என்ன செய்தாய்? அதை முதலில் சொல்; நமக்குள் வெளியிடாத ரகசியம் கூட உண்டா? நடந்ததை நீயும் சொல். நானும் சொல்லுகிறேன். அம் மாளு:- (வேடிக்கையாக நகைத்து) நீதான் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாயே! இப்படிப்பட்ட அற்புதமான அழகு வாய்ந்த யெளவன தீரரை நீ இதுவரையில் பார்த்ததே இல்லை என்று நீ சொல்லிவிட்டாயே! நான் எப்போதும் உன்னோடு கூடவே இருப்பவள்தானே! நானும் அதே அபிப் பிராயத்தைத்தான் கொடுக்க வேண்டும். உனக்குத்