பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/338

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Ö26 பூர்ணசந்திரோதயம்-2 பிரயாசைக்குச் சன்மானமாக இருட்டில் ரகசியமாக உனக்கு ஏதாவது இரண்டொரு முத்தம் கொடுத்தாரா? அம்மாளு:- சேச்சே! அதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. நான் காட்டிய சைகைகளின் கருத்தைத்தான் அவர் சரியாக உணரவில்லையோ, அல்லது என்னிடத்தில் அவருக்கு விருப்பம்தான் இல்லையோ உண்மை இன்னது என்பது தெரியவில்லை. அவர் எவ்விதமான பதில் சைகையும் செய்ய வில்லை. ஆனால், ஒரு விஷயம்; அவர் என்னை முரட்டுத் தனமாக தள்ளவாவது, தாம் என்னை அருவருக்கிறதாகக் காட்டிச் சடேரென்று அப்பால் நகரவாவது இல்லை. நான் உண்மையிலேயே தூங்கி ஆடி விழுகிறேன் என்று நினைத்து அவர் மெதுவாக உன்பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டே போனார். தனம் :- (அப்போதே உண்மையை உள்ளபடி அறிந்து கொண்டவள் போல வியப் படைந்து) ஒகோ காரியம் அப்படியா நடந்தது! நீ செய்த சேஷ்டைக்கு பயந்துகொண்டா அவர் என் பக்கத்தில் நகர்ந்து வந்தார்? நான் வேறுவிதமாக அல்லவா நினைத்து ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன்! அடாடா! எப்படிப்பட்ட முட்டாள் தனமான வேலை செய்துவிட்டேன்! அவர் என் பக்கமாக நகர்ந்து நகர்ந்து வந்தபோது, அடிக்கடி அவருடைய வஸ்திரமும், உடம்பும் என் மேல் பட்டதைக் கண்டு அவர் என்னிடத்தில் ஏதோ எண்ணங் கொண்டு வேண்டுமென்றே அப்படிச் சைகை காட்டுகிறார் என்றல்லவா நினைத்துவிட்டேன்! உனக்காக பயந்து கொண்டு அவர் என் பக்கம் நகருகிறார் என்று தெரியாமல் போய்விட்டதே! அம்மாளு:- (தனது தங்கையும் தன்னைப்போலவே ஏதோ விஷமம் செய்திருக்கிறாள் என்பதைக் கேட்க, நிரம்பவும் மோகலாகிரி கொண்டவளாய்) ஒகோ! அப்படியானால்,