30 பூர்ணசந்திரோதயம்-2 பிரதிபிம்பித்து நின்றமையால், எங்கு பார்த்தாலும், எண்ணிறந்த பூர்ணசந்திரோ தயமே காணப்பட்டாள். அந்த ஹாலின் சுவர் ஒரமாக தேர்சிங்காரம்போல அறுபத்துநான்கு சப்பிரமஞ்சங்கள் காணப்பட்டன. ஒன்று நல் முத்துக்களினால் ஆன ஹாரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதுபோல, மற்றவைகள் முறையே பவழங்கள், வைரங்கள், பச்சைகள், கெம்புகள், தந்தம், ரோஜாப்பூக்கள், வெட்டிவேர், தாமரைப் புஷ்பங்கள் முதலிய வைகளின் ஹாரங்களால் வெவ்வேறு வகையில் அலங்கரிக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு கட்டிலிற்குப் பக்கத்திலும் பலவகைப் பட்ட படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அந்தப் படங்கள் எல்லாம் ஸ்திரி புருஷர் பலவகைப்பட்ட சிற்றின்ப லீலைகள் புரியும் சமயங்களைக் காட்டிய உருவங்களையே கொண்டவை யாக இருந்தன. அந்தக் கட்டில்களும், ஆங்காங்கு இருந்த படங்களும் கண்ணாடிச் சுவர்களில் பிரதிபிம்பித்து ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரமாகக் காணப்பட்டு பூர்ணசந்தி ரோயத்தின் மனதை மயக்கி, மதியைக் கலக்கி, அவளது புலன்களெல்லாம் கரைகடந்த பிரமிப்படைந்து ஸ்தம்பமாக நிற்கும் படி செய்தன. எது உண்மையான வடிவம், எது பிரதிபிம்பம் என்பதை அறியமாட்டாமல், அந்த மடமான் திகைத்துத் தடுமாறினாள். ஆனால், அந்த ஹாலிலும் மனிதர் எவரும் இருந்ததாகக் காணப்படவில்லை. அதற்குமேல் தான் எங்கேயும் போவது சரியல்லவென்று நினைத்த பூர்ணசந்தி ரோதயம், தான் அவ்விடத்திலேயே உட்கார்ந்திருந்தால், யாராவது மனிதர் எப்படியும் அவ்விடத்திற்கு வந்துதான் ஆகவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள். அந்த மனமோகன சிங்கார ஹாலில் நடுவில் போடப்பட்டிருந்ததும் கருங்காலியில் நவரத்னம் இழைக்கப்பட்டதுமான வட்ட மேஜையைச் சுற்றிலும், ஸொகுலான ஸோபாக்கள் தைக்கப்பட்ட சாய்மான நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அந்த வட்ட வடிவ மேஜையின்மீது பூச்செண்டுகளும், மாதுரியமான கனிவர்க்கங்களும், மிட்டாய் தினுசுகளும்,
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/34
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
