பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 329 தனம் :- காரணம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். இருந்தாலும் நாம் இவரை எளிதில் விட்டுவிடக் கூடாது. இப்படிப்பட்ட மன்மத புருஷன் தெய்வச் செயலாக நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறார். இவரை நாம் சும்மா விட்டு விட்டால், நம்மைவிட துர்ப்பாக்கியவாதிகள் வேறே இருக்க மாட்டார்கள். ஆனால், இதில் ஒரு விஷயம் இருக்கிறது. நாம் இருவரும் ஒரே காலத்தில் இவரிடம் முயற்சி செய்தால், நம்மைப் பற்றி இவருடைய மனசில் கேவலமான அபிப் பிராயம் உண்டாகி விடும். நாம் சுத்தமாகக் கெட்டுப்போனதாசிகள் என்று நினைத்துவிடுவார். இதற்கு முன் தான் ஒருவருக்கொருவர் தெரியாத நிலைமையில் நாமிருவரும் முயற்சி செய்து ஏமாற்றம் அடைந்தோம். இனிமேல் நாம் அப்படிச் செய்யக்கூடாது. நம்முள் யாராவது ஒருவர் முதலில் முயற்சி செய்வோம். அது பலியாவிட்டால் இன்னொருவர் அதற்குப் பிறகு பிரயத்தனம் செய்து பார்க்கலாம். அம்மாளு :- நீ சொல்வது சிறந்த யோசனை. நானும் அப்படியே தான் நினைத்தேன். நான் மூத்தவள் ஆகையால், முதல் மரியாதை எனக் குத்தான் கிடைக்க வேண்டும். ஆகையால், நான் முதலில் முயற்சித்துப் பார்ப்பதைப் பற்றி நீ எவ்வித ஆட்சேபணையும் சொல்ல மாட்டாய் என்று நினைக்கிறேன். தனம் :- அப்படியே ஆகட்டும். உன்னுடைய ஆசைக்குக் குறுக்காக நான் என்றைக்காவது நின்றது உண்டா? நீயே முதலில் முயற்சி செய்து அவருடைய பிரியத்தைச் சம்பாதித்துக் கொள். உனக்க அவர் வழிக்கு வராவிட்டால், அதன்பிறகு நான் பார்த்துக் கொள்ளுகிறேன். அம்மாளு:-சந்தோஷம். ஆனால் நீ எனக்கு ஒர் உதவி செய்ய வேண்டும். இன்று மத்தியானம் சாப்பிட்ட பிறகு நீ அபிராமி யையும் நம்முடைய சின்னம்மாளையும் அழைத்துக்கொண்டு இந்த ஊரில் உள்ள வேடிக்கைகளை எல்லாம் பார்த்து