330 பூர்ணசந்திரோதயம்-2 விட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் போய், அவர்களோடு சாயுங்காலம் வந்து சேர். இவர் வெளியில் போகாமல் இங்கேயே இருக்கலாம் என்று நினைக்கிறேன். அப்போது நான் மெதுவாக அவருடைய விடுதிக்குப் போய், என்னால் ஆன தந்திரங்களை எல்லாம் செய்து அவருடைய மனசை மாற்றி ஒரு நிமிஷத்தில் அவர் என்னுடைய வலையில் சிக்கிக் கொள்ளும்படி செய்கிறேன்.
தனம்:-ஒ! அப்படியே செய்கிறேன். அதைப்பற்றி நீ கொஞ்ச மும் யோசனை செய்ய வேண்டாம். நம் மால் எல்லாம் இவருடைய மனசை மாற்ற முடியாவிட்டால் கடைசியில் நம்முடைய சின்னம்மாளிடம் சொல்லுவோம்; எப்பேர்ப்பட்ட வரையும் மயக்கும் படியான வசிய மருந்துகள் செய்ய நம்முடைய சின்னம்மாளுக்குத் தெரியும். ஏதாவது மருந்து தயாரிக்கச் செய்து இவருக்குக் கொடுத்துவிடுவோம்-என்றாள்.
அப்போது, அவர்களது தங்கையான அபிராமி அங்கே
வந்தாள். ஆகையால், அந்த இனிய சம்பாஷணை அவ்வளவோடு முடிவுற்றது.
இதன் தொடர்ச்சி 3ம் பாகத்தில் தொடரும்....
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/342
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
