வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 31 குழம்புப் பால், இளநீர், தாம்பூலாதி சாமான்கள் முதலிய சகலமான வஸ்துகளும் நிறைந்திருந்தன. எங்கு பார்த்தாலும் ஊதுவர்த்திகள் கொளுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த ஹால் முழுதும் வாசனை கமகம வென்று கமழ்ந்து மனதைப் பரவசப் படுத்திக்கொண்டிருந்தது.
அந்த வட்ட மேஜையைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த லோபா தைக்கப்பட்ட சாய்மான நாற்காலி ஒன்றில், பூர்ண
சந்திரோதயம் போய் உட்கார்ந்து கொண்டாள்.
உட்கார்ந்த உடனே கலீரென்று ஒர் ஒசை உண்டாயிற்று. அந்த நாற்காலியில் ரகசியமாக அமைக்கப்பட்டிருந்த இரண்டு வளையங்கள் சடேரென்று நீண்டு வந்து அவளது இடுப்பைச் சுற்றிலும் ஒட்டியாணம் போடப்பட்டதுபோல அவளை அந்த நாற்காலியோடு சேர்த்து இறுகக் கட்டிவிட்டது. அதுபோல இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும், வேறு இரண்டு வளையங்கள் பிடித்துக் கட்டிவிட்டன. அவள் வீறிட்டுக் கத்திக்கொண்டு எழுந்திருக்க முயன்றாள். அவளால் அப்படி இப்படி நகரவும் கூடாமல் போய்விட்டது.
அடுத்த நிமிஷத்தில் ஒரு கண்ணாடிக் கதவு திறந்து கொண்டது. மருங்காபுரி ஜெமீந்தார் புன்னகை பூத்த முகத்தோடு அங்கே வந்து, "பூர்ணசந்திரோதயம்! நீயாகவே மனம் கனிந்து என்னுடைய ஆலிங் கனத்துக்கு வரமாட்டாய். அதற்காக உன்னை இப்படிக் கட்டிவைத்து நான் உன்னை ஆலிங்கனம் செய்து உன்னை வசப்படுத்தப் போகிறேன். உன்னுடைய சாகலம் எல்லாம் என்னிடம் பலியாது. நீ எவ்வளவுதான் ஓங்கிக் கூச்சலிட்டாலும், அது இந்த இடத்துக்கு வெளியில் கேட்கப் போகிறதில்லை. நீ இன்று என் வலையிலிருந்து தப்பவே முடியாது' என்று கூறியவண்ணம் முடுக்காக நடந்து அவளண்டை நெருங்கி வந்தார்.
gy.&.H-3
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/35
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
