பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பூர்ணசந்திரோதயம்-2 போட்டுக்கொண்டு நிற்க உயரமான வஸ்து முதலிய எதுவும் அந்த இடத்தில் காணப்படவில்லை. எப்படியாவது தான் பிரயாசைப்பட்டு, அந்தக் கட்டு முழுதும் இருளில் தடவிப் பார்த்து ஏதேனும் சாமானைக் கண்டுபிடித்து அதை எடுத்து வந்து முற்றத்தில் வைத்து அதன் உதவியால் கூரையில் ஏறிப்போக முடிந்தாலும், முன்கட்டில் கூரையின் மேல் உட்கார்ந்திருக்கும் முரடர்கள் தன்னைக் கண்டுபிடித்துக் கொள்வது நிச்சயம் என்ற நினைவு தோன்றியது. ஆகையால், அவ்வாறு முயற்சிப்பதும் பலியாத காரியமாகத் தோன்றியது. இரண்டாவது கட்டின் பின்புறக் கதவு உட்புறத்தில் பூட்டப்பட்டிருந்தது என்பதை அவள் முன்னரே உணர்ந்து கொண்டாள். ஆதலால், அந்தக் கதவைத் திறந்து கொண்டு போவதும் கூடாத காரியமாக இருந்தது. ஆகவே, தான் முன் கட்டிற்குள்போய், வாசல் கதவின் வழியாகத் தப்பிப் போவதைத் தவிர வேறுவிதமாகத் தப்ப வழியில்லை என்பது தெளிவு பட்டது. முன்கட்டிலும் விளக்கு இல்லாது இருந்தமையால், அவ்விடத்திலும் இருள் சூழ்ந்திருந்தது. தான் போய் அவ்விடத்தில் இருந்துகொண்டு சன்னியாசிக்குக் கதவைத் திறந்துவிட்டு விளக்குக் காற்றினால் அணைந்து போய் விட்டது என்று அவனிடம் சொன்னால், அவன் விளக்கைக் கொளுத்தப் போவான். ஆதலால், அந்தச் சமயத்தில் தான் மெதுவாகக் கதவைத் திறந்துகொண்டு வெளியில் போய்விடலாம் என்ற ஒர் எண்ணம் அவளது மனதில் தோன்றியது. ஆனாலும், அவர்கள் வேறோர் ஆளை வெளியில் வைத்து சன்னியாசி உள்ளே நுழைந்த உடனே கதவை வெளிப்புறத்தில் தாளிட்டுவிட முடிவு செய்திருந்தது அவளுக்கு நினைவு உண்டானது. ஆகையால், சன்னியாசி கதவை மூடிக்கொண்டு ள்ளே நுழைந்தபிறகு, தான் கதவைத் திறந்து கொண்டு 岛一 جميعهم ...) போவதும் பலியாதகாரியமாகத் தோன்றியது. ஆகையால், தான் ாந்த வகையாலும் தப்பிப்போவது சாத்தியமற்ற காரியமாகத் தான்றவே அவளது நெஞ்சம் பிரமாதமாகக் கலங்கியது. {ः । Ç