பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 35 சன்னியாசியும், அவனது துணைவர்களான முரட்டு மனிதர் களும் கொல்லைப்பக்கத்துத் திண்ணையிலிருந்து கீழே இறங்கி ஒர் அடி நடப்பதற்குள் மேலே விவரிக்கப்பட்ட எண்ணங்களும், யோசனையும் ஷண்முகவடிவின் மனதில் மின்னல் போலத் தோன்றி மறைந்தன. தான்தப்பிப்போவதற்கான மார்க்கங்களை எல்லாம் அவள் ஆராய்ச்சி செய்து, அவைகளுள் எதுவும் பலிதமாகக் கூடியதல்ல என்பதைக் கண்டுபிடிக்க ஒரு நொடி நேரங் கூடப் பிடிக்கவில்லை. கடைசி முடிவாக அவளது மனதில் ஒரு யுக்தி தோன்றியது. அந்த யுக்திப்படி நடந்து தான் தப் பிப்போவது மகா துர்பலமான காரியமாக இருந்தது. அப்படித் தப்ப முயற்சிப்பதைத் தவிர, வேறே வழியிருந்த தாகவும் தோன்றவில்லை. பின்புறத் திண்ணையிலிருந்து புறப்பட்டு சன்னியாசி முன்பக்க வாசலுக்கு வருவதற்கு முன், தான் ஒரே ஒட்டமாக ஒடி, முன் பக்கத்துக் கதவைத் திறந்து கொண்டு வெளியில் ஒடிப் போய்விட வேண்டும் என்ற ஒர் எண்ணமும் உண்டாயிற்று. அப்படிச் செய்வதிலும் சில இடையூறுகள் தோன்றக்கூடியதாக இருந்தன. சன்னியாசி ஒரு நாழிகை நேரத்திற்கு முன்தன்னை முதற்கட்டில் விட்டுப் பிரிந்து வெளியில் போன காலத்தில், முன் பக்கத்துக் கதவை வெளிப்புறத்தில் தாளிட்டுக்கொண்டு போயிருப்பானோ என்ற அச்சமும் ஒருபுறத்தில் வதைத்தது. அவன் அப்படிச் செய்யாதிருந்தாலும் தான் தப்பித்து மடத்திற்கு வெளியில் போப் க் கொஞ்ச தூரம் நடப்பதற்குள் சன்னியாசியும் , அவனோடு வரும் முரட்டாளும் வந்து தன்னைப் பிடித்துக் கொள்வார்கள் என்ற திகிலும் உண்டாயிற்று. ஆனாலும், மடத்திற்குள் அடைபட்டுத் தவிப்பதைக் காட்டிலும், வெளியிற் போய், ஒடியோ, கூச்சலிட்டோ, அவர்களைத் திமிறியோ முயன்றுபார்ப்பது உசிதமாகத் தோன்றியது. தெய்வச் செயலாக யாராவது ஜனங்கள் தனக்கு உதவி செய்ய வரக்கூடும் என்ற எண்ணமும் தோன்றியது. ஆகையால், அந்த இளந்தோகை ஒரே நொடியில் தனது மனத்தைத் திடப்படுத்திக் கொண்டவளாய்த்