பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 43 பார்த்தாள். மடம் இருந்த பக்கத்திலிருந்து மனிதர் தொடர்ந்து வருகிறார்களோ என்று அவள் முதலில் பார்த்துத் திருப்தி செய்து கொண்டாள். அவ்விடத்திலிருந்து எவரும் வந்ததாகத் தோன்றவில்லை. மற்ற திக்குகளில் தான் போய் மறைந்து. கொள்வதற்கு வசதியான இடம் எங்கே இருக்கிறதென்று மறுபடியும் வெகு சீக்கிரத்தில் ஆராய்ந்து பார்த்தாள். குளமிருந்த பக்கத்தில் கரை நெடுந்துரம் வரையில் போனபின்னரே வாய்க்கால் ஆரம்பித்தது. ஆகையால் அந்த வழியில் போவது உசிதமாகத் தோன்றவில்லை. ஆகவே, அவளது திருஷ்டி எதிர்ப்பக்கத்தில் இருந்த வாய்க்காலின்பக்கமாகத் திரும்பியது. சுமார் 10 கெஜ தூரத்தில் ஒர் ஒற்றையடிப் பாதை வாய்க்காலிற்குள் இறங்கி அப்பால் எவ்விடத்திற்கோ போனதாகத் தோன்றியது. உடனே ஷண்முகவடிவு மடத்தின் பக்கம் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி விசையாக நடந்து அந்த ஒற்றை யடிப் பாதையின் வழியாக வாய்க்காலிற்குள் இறங்கினாள். அந்த வாய்க்கால் மிகவும் குறுகியதாகவும், சப்பாத்துப்புதர், சேறு முதலியவை நிறைந்ததாகவும் இருந்தது ஆகையால், அவள் வாய்க்காலின் உள்வாயின் வழியாக வலது பக்கத்திலோ, இடது பக்கத்திலோ போகாமல், அந்த ஒற்றையடிப் பாதையிலேயே நடந்து வாய்க்காலைக் கடந்து அப்பால் சென்றாள். அந்த இடம் சாகுபடி செய்யப்படாத மந்தை வெளியாகத் தோன்றியது. அன்றி, எங்கும் இலுப்பை மரங்களும், சப்பாத்துப் புதர்களும், தாழை, பிரம்பு முதலிய வற்றின் குத்துக்களும் நிரம்பப் பெற்றதாய்க் காணப்பட்டது. அதன் நடுவில் போன ஒற்றையடிப் பாதையின் வழியாகவே தான் நடந்து சென்றால், சிறிது நேரமாவதற்குள், அந்தக் கபட சன்னியாசியும் ஆட்களும் தான் திரும்பி வராததைப் பற்றி சந்தேகித்து, தன்னைத் தேடிக்கொண்டு ஒற்றையடிப்பாதையின் வழியாகத் தொடர்ந்து ஓடிவந்து தன்னைப் பிடித்து மறுபடியும் பலவந்தமாக அழைத்துக்கொண்டு போய்விடுவார்கள் என்ற அச்சம் தோன்றியது. ஆகையால், அந்த மெல்லியலாள்