பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 பூர்ணசந்திரோதயம்-2 ஒற்றையடிப் பாதையை விட்டு விலகிக் குறுக்காக விழுந்து தலைகால் தெரியாமல் ஒரே ஒட்டமாக ஒடத் தொடங்கினாள். அந்த மனிதர்கள் ஒருவேளை வந்துவிடுவார்களோ என்ற திகிலினால் அவளது முகம் அடிக்கடி பின்பக்கம் திரும்பியது. ஆகையால், அந்தச் சமயத்தில் அவளது கால்கள் மேடு பள்ளங்களில் இடறியது. ஆகையால், அவள் முட்களிலும் கல்களிலும், புதர்களிலும் விழுந்து ஒடுகிறாள். பலவிடங்களில் அவளது ஆடையும் உடம்பும் கிழிபட்டுப் போயின. உடம்பு முழுதும் வியர்வை வெள்ளமாக ஓடுகிறது. பல இடங்களி லிருந்து இரத்தம் கசிந்தோடுகிறது. உடம்பு முழுதும் நெருப்பி னால் சுடப்பட்டது போலப் பற்றி எரிகிறது. அந்த இளந்தோகை தனது மானத்தையும் பிரானனையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆவலும் ஆவேசமும் கொண்டவளாப் இருளில் காடுமேடுகளில் எல்லாம் புகுந்து திக்குத்திசை அறியாமல் கடுகி ஓடுகிறாள். தான் ஒற்றையடிப் பாதையைவிட்டுக் குறுக்காக வெகுதூரம் வந்துவிட்டதாக அவள் எண்ணிக் கொண்டாள். ஆனாலும், அந்த ஒற்றையடிப் பாதை சிறிது தூரம் வரையில் நேராகப் போப், அதற்கு அப்பால் அவள் போன பக்கமாகத் திரும் பிப் பாம்பின் வளைவுபோல வளைந்துவளைந்து சென்றது. ஆகையால், அவள் போன வழியில் எல்லாம் அந்த ஒற்றையடிப்பாதை குறுக்கிட்டுக் கொண்டிருந்தது. அதைக் கண்ட ஷண்முகவடிவு அந்தப் பாதையும் முதலில் தான் வந்ததும் வெவ்வேறு பாதைகள் என்று நினைத்துக்கொண்டவளாய் மேன்மேலும் போய்க் கொண்டே இருக்க, கால் நாழிகை நேரம் கழிந்தது. தான் அநேகமாகத் தப்பித்துக் கொண்டதாக எண்ணி மிகுந்த உற்சாகமும், நம்பிக்கையும், மகிழ்ச்சியும் கொண்டவளாய் நடந்தவள் சிறிது துரத்தில் மனிதர் பேசிய குரலோசையையும், விரைவாக நடந்து வந்த காலடி ஓசையையும் கேட்டுத் திடுக்கிட்டு மான்போல மருண்டு நாற்புறங்களிலும் திரும்பித் திரும்பிப் பார்த்துப் பம்பரம் போலச் சுழன்று தத்தளித்து நின்று