வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 45 எந்த இடத்தில் ஒசை உண்டானது என்பதை உற்றுக் கவனிக்க, அடுத்த நிமிஷத்தில் நாலைந்து முரட்டு மனிதர்கள், “அதோ இருக்கிறாள்: பிடித்துக் கொள்ளுங்கள். விடாதீர்கள்' என்று கூறிய வண்ணம் பல திக்குகளிலும் இருந்த புதர்களின் இடைவெளிகள் வழியாகத்தபதபன்ெறு தோன்றி ஒட்டமாக ஓடி வந்தனர். உடனே சடக் கென்று திரும்பிப் பார்த்து அந்த மனிதர்கள் தன்னைப் பிடிக்க வந்ததைக் கண்டுகொண்ட நமது பேடன்னம் திக்பிரமையும் திகிலும் கொண்டு, எங்கும் போகக் கால் எழாதவளாய், பிரமித்து அப்படியே நின்றுவிட்டாள். அதற்குமுன் அவளது மனதில் பொங்கியெழுந்து பெருகிக் கொண்டிருந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் ஒரேநொடியில் பறந்து போயின. கட்டில் அடங்காக் குலை நடுக்கமும் சொல்லில் அடங்காப் பெரும் பீதியும் எழுந்து அவளை வதைக்கலாயின. அவளது உயிரில் பெரும் பாகமும் போய்விட்டதென்று சொல்வது மிகைப்படுத்திக் கூறியதாகாது. மடத்தின் கூரைமேல் ஒளிந்திருந்த முரடர்களும் கபட சன்னியாசியும், தான் தப்பி ஒடிவிட்டதை உணர்ந்து துரத்திக்கொண்டு வந்துவிட்டார்கள் என்ற உண்மை உடனே சந்தேகமற விளங்கிவிட்டது. ஈவிரக்கமற்ற அந்த முரடர்கள் தன்னைப் பிடித்து எப்படியும் துர்க்கிக் கொண்டு போய் விடுவார்களென்ற பெருங்கிலி உண்டாகிவிடவே அந்த இளந்தோகை கூச்சலிடவும் மாட்டாத வளாய், அச்சமே வடிவெடுத்து வந்தவள்போல வெடவெடத்து நிற்க, அடுத்த நிமிஷத்தில் அந்த முரடர்கள் ஐவரும் நெருங்கி வந்து அவளை வளைத்துக் கொண்டனர். தங்களுடைய வஸ்திரங்களை எடுத்து முறுக்கி, அவளது கால்களையும் கைகளையும் சேர்த்துக் கட்டத் தொடங்கினர். அந்த அக்கிரமச் செய்கையைக் கண்ட பேதை மெல்லியலாள் ஷண்முகவடிவு, "ஐயோ ஐயோ அக்கிரமம் செய்கிறார்களே! இதைக் கேட்க யாருமில்லையா? என்று பிரமாதமாகக் கூச்சலிட்டுக் கதற, அதைக் கண்ட முரடர்கள், ஒரு துணியைக் கிழித்துப் பந்தாகச் சுருட்டி அவளது வாயில் வைத்து அடைத்து விட்டுக் குறவர்கள்
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/49
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
