பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பூர்ணசந்திரோதயம் முதல் பாகம் தொடர்ச்சி ..... அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் அவரது அபாரமான ஸ்தோத்திர மொழிகளைக் கேட்டு விலக்க இயலாத ஆனந்த பரசவம் அடைந்தவளாய், அவரை நோக்கி மந்த ஹாஸம் செய்து, 'ஸ்திரீகளை ஸ்தோத்திரம் செய்வதில் தாங்கள் நிரம் பவும் பாண்டித்தியம் அடைந்தவர்கள் என்பது இப்போதே தெரிகிறது. அந்த விஷயத்தில் முதல் தாம்பூலம் பெற அருகமுள்ளவர்கள் தாங்கள்தான் என்பதும் நன்றாக விளங்குகிறது. எந்த விஷயத்திலும் பழக்கந்தான் பிரதானம். ஒரே வித்தையில் பழகுகிறவர்களுக்கு அதில் பாண்டித்தியம் உண்டாவது நிச்சயம். தாங்கள் என்னிடம் செய்தது போல இதற்கு முன் பல ஸ்திரீகளிடத்திலும் இதே மாதிரி முகஸ்துதியாகப் பேசிப் பேசி இவ்வளவு முதன்மை அடைந்திருக்கிறீர்கள். சிற்றின்பம் பேரின்பம் ஆகிய இரண்டையும் உண்டாக்கிக் கொடுக்க உபயோகப்படும் தெய்வம் என்று என்னை இப்போது புகழ்ந்தது போல இதற்கு முன்னும் எத்தனையோ பெண் தெய்வங்களைத் தாங்கள் புகழ்ந்திருப்பீர்கள்; இனிமேலும் யாராவது புதியவளாக அகப்பட்டால், அவளையும் இப்படியேதான் புகழப் போகிறீர்கள்; இந்த ஊர் மகாராஜாவின் அத்தை மகள் என்று வேஷம் போட்டுக் கொண்டு என்னிடம் வந்து தாங்கள் இந்நேரம் நடித்ததுபோல இன்னம் எத்தனை இடங்களில் செய்திருப்பீர்களோ ஆனால் என் மனசில் முக்கியமான ஒரு சந்தேகம் உதிக்கிறது; தாங்கள் இந்த ஊர் மகாராஜாவின் அத்தை மகளென்று நடித்தது எப்படிப் பொய் வேஷமாக மாறியதோ, அதுபோல, அப்போது சொன்ன வார்த்தைகளும் வெறும் வார்த்தைகளாக அந்த வேஷத்தோடு மறைந்து போய்