பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 பூர்ணசந்திரோதயம்-2 நிற்பதைக் கருதி அவர்கள்.அவ்விடத்தில் ஒளிந்து கொண்டிருக்கி றார்கள் என்பதை ஒருவாறு உணர்ந்து கொண்டிருந்த ஷண்முக வடிவு அதுவே நல்ல சமயமென்று நினைத்துத் தான் எவ்வளவு பலமாக ஓங்கிக் கூச்சலிடக் கடுமோ,அவ்வளவு அதிக உரமாகக் கச்சலிட்டு, "ஐயோ ஐயோ! வழியோடு போன பெண்பிள்ளை யான என்னை இந்த முரடர்கள் பிடித்து அக்கிரமம் செய்கிறார்களே! வண்டியில் யார் ஐயா இருக்கிறது? ஒடி வாருங்கள். இந்த வாய்க்காலுக்குப் பக்கத்தில் என்னை வைத்துக்கொண்டு நிற்கிறார்கள். இந்த மடத்துச் சாமியார் என்னைக் கற்பழிக்க எத்தனிக்கிறார். பெரிய பண்ணைப் பிள்ளையை உடனே அழைத்துக்கொண்டு மடத்துக்கு வந்து சேருங்கள்; இல்லாவிட்டால் இன்னம் கொஞ்ச நேரத்தில் இந்தப் பாவிகள் என்னைக் கொன்று விடப் போகிறார்கள்' என்று இரண்டு மூன்று தரம் திருப்பித் திருப்பிக் கூச்சலிட, அதைக் கேட்ட முரடர்கள் திடுக்கிட்டு அச்சங் கொண்டனர். சிலர் அவளது வாயைப் பிடித்து அழுத்தி மூடி நெருக்கினர். ஒருவன் கீழே கிடந்ததுணிப்பந்தை எடுத்து மறுபடியும் அவளது வாயில் அடைக்கிறான். அவளை அவ்விடத்திலிருந்து மடத்திற்குக் கொண்டு போகிறதா அல்லது வேறே எவ்விடத்திற்குக் கொண்டு போகிறது என்பதை அறியாமல் அவர்கள்தத்தளிக்கிறார்கள், ஆனால் வண்டியில் அதிக ஆள்கள் இல்லை என்று அவர்கள் அந்த இருளில் தெரிந்து கொண்டார்கள். ஆகையால், தாங்கள் உடனே ஒடிப்போக வேண்டும் என்ற பயமின்றி, மிகுந்த கவலையோடு கலங்கி நின்று கொண்டிருந்தனர். அதற்குள் அந்த வண்டியில் மாடுகளைப் பூட்டி புறப்பட்டுப் போக ஆயத்தமாக இருந்த அந்த வண்டிக்காரர், மிகவும் சமீபத்தில் வாய்க்காலுக்கு அப்புறத்தில் திடீரென்று கேட்ட மகா இனிமையான பெண் குரலைக் கேட்டு திடுக்கிட்டு அவள் என்ன சொல்கிறாள் என்பதைக் கவனிக்க, நமது ஷண்முகவடிவு கூச்சலிட்டுக் கூறிய வார்த்தைகளெல்லாம் அந்த மனிதரது செவியில் கணிர்