பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 பூர்ணசந்திரோதயம்-2 ரகசியக் கருத்தை அறிந்துகொண்டு தானும் هاهنيةء சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியிட்டதையும், அதைக்கேட்டு வண்டியிலிருந்த மனிதர் இறங்கிக் கையும் தடியுமா, ஒடியதையும், அவர் ஒடியபோது வண்டிக்காரனுக்கு உத்தரவு செய்ததையும் கேட்ட போலிச்சாமியார் கிலிகொண்டு நடுநடுங்கி ஒரே ஒட்டமாக ஓடி மடத்திற்குள் புகுந்து கதவை உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டார். வாய்க்காலின் மறைவில் ஷண்முகவடிவோடு நின்று கொண்டிருந்த மனிதர்கள் வண்டியிலிருந்த மனிதர் பாணாத்தடியை எடுத்துக்கொண்டு தங்களை நோக்கி வீராவேசத்தோடு ஓடிவந்ததைக் கண்டு அந்தப் பெண்மணியைத் துக்கியபடி விரைவாக நடந்து பக்கத்தில் இருந்த புதரின் மறைவில் பதுங்கி வெகு தூரம் அப்பால் போய்விட நினைத்தவராய் ஒளியத் தொடங்கினர். வண்டியிலிருந்து இறங்கித் தலைகால் தெரியாமல் ஓடிவந்த மனிதர் தமது உயிரை ஒரு திரணமாக மதித்துத் தலைகால் தெரியாமல் ஒற்றையடிப் பாதையில் நுழைந்து ஓடியவண்ணம், 'விடாதே, விடாதே, பிடி, பிடி, திருட்டுப் பயல்களை அடி, உதை அவர்களையெல்லாம் உயிரோடு பூமியில் புதைத்துவிடு. அக்கிரமக்கார நாய்களின் மண்டையை உடை' என்று பலமாக ஆர்ப்பரித்து ஆடம்பரம் செய்துகொண்டு ஒடி, அவர்கள் பதுங்கியதைக் கண்டு விரைவாகப் பின் தொடர்ந்து சென்று இரண்டொரு நிமிஷ நேரத்தில், அவர்களண்டை நெருங்கி விட்டார். அந்த முரட்டாள்கள் ஐவரும் கைகளில் எவ்வித ஆயுதமும் இல்லாமல் நிராயுதபாணிகளாக இருந்தனர். ஆனாலும், அவர்கள் பனை மரங்களைப் போன்ற திடகாத்திரமான முரட்டு உடம்புகளை உடையவர்களாக இருந்தமையால், அவர்கள் பாணாத்தடியோடு வந்த மனிதரைக் கண்டு சிறிதும் அஞ்சாமல், துணிவாக எதிர்க்க ஆரம்பித்தனர். ஷண்முகவடிவை ஒரு பக்கமாகத் தரையில் வைத்து விட்டு ஐவரும் ஒருமுகமாகத் திரும்பி பாணாத்தடி வைத்திருந்த மனிதரைச்சுற்றி வளைத்துக் கொண்டனர். அவரது கையிலிருந்த