பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 பூர்ணசந்திரோதயம்-2 உடனே ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஷண்முகவடிவு கட்டப்பட்டுக் கிடந்த இடத்திற்குப் போய் அவளது கட்டுகளை அவிழ்க்க எத்தனித்தார். கால்களிலும் கைகளிலும் இருந்த கட்டுகள் மிகவும் இறுகலாக இருந்தமையால், அவைகளை விலக்குவதற்காகத் தாம் எத்தனித்திருந்தால், அதற்குள் அந்த முரட்டு மனிதர்கள் பாணாத்தடிகளோடும் புதிய ஆள்களோடும் திரும்பி வருவார்கள். ஆதனால், தாம் மறுபடி அவர்களோடு யுத்தம் செய்ய நேர்ந்தாலும் நேரலாம் என்றும், அவர்கள் தம்மை வென்று விடும் பட்சத்தில், தாம் அந்த மடந்தையைக் காப்பாற்ற இயலாமல் போய்விடுமோ என்றும் நினைத்தவராய், அந்த யௌவனப் புருஷர், அவளது கட்டுகளையெல்லாம் பின்னால் சாவகாசமாக அவிழ்த்துவிட்டுக் கொள்ளலாமென்று தீர்மானித்துக் கொண்டவராய் அவளது வாயிலிருந்த துணிப்பந்தை மாத்திரம் விரைவாக எடுத்து வெளியில் போட்டு விட்டு, மிகுந்த உற்சாகமும் ஆவேசமும் கொண்டவராய்த் தமது கைகளைக் கொடுத்து ஒரு சிறிய குழந்தையைத் தூக்குவதுபோல அந்தப் பெண்மணியைத்துக்கி மார்பின்மீதும் தோளின்மீதும் சார்த்திக்கொண்டு தடதடவென்று ஒட்டமாக ஒடி ஒற்றையடிப் பாதையை அடைந்து வாய்க்காலைக் கடந்து ராஜபாட்டையின் மீதேறி வண்டி இருந்த இடத்தை நோக்கி ஒடினார். அந்த முரட்டு மனிதர்கள் மறுபடி திரும்பி வந்து விடுவார்களானால், அதன்பிறகு அந்த அழகிய நங்கையைத் தாம் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற திகிலே அவருக்கு இரண்டு இறகுகள் முளைத்துப் பறக்கச் செய்தனவோ என்னும் படி, அவரது உடம்பு காற்றாகப் பறந்தது என்று சொல்வதே பொருத்தமுடையதாகும். அவ்வளவு அதிக கனமுள்ள ஒரு யெளவன ஸ்திரீ தம்மீது இருந்ததையே பொருட்படுத்தாமல் அடியோடு மெய்மறந்து வீராவேசம் கொண்டு ஒட்டமாக ஒடி இன்பகரமான அந்தப் பெண்சுமையை வண்டிக்குள் நன்றாக உள்ளே தள்ளி வைத்துவிட்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மூக்கணையில் ஏறி உட்கார்ந்து