பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 55 அதைக்கண்ட அந்த மனிதர் நிரம்பவும் மகிழ்ச்சியும் இன்பமும் அடைந்தவராய் ப் பாத்திரத்தை அதன் சொந்தக்காரரிடம் சேர்த்துவிட்டு வந்து முன்னால் உட்கார்ந்து வண்டியை மறுபடியும் ஒட்ட ஆரம்பித்தார். அந்த முரட்டாள்கள் குறுக்கு வழியாக நடந்து, தாம் போகும் நாகைப்பட்டணம் ரஸ்தாவுக்கு வந்து வண்டியை மறுத்துத் தம்மை மேற்கொண்டு அந்த யெளவனப் பெண்ணை மறுபடியும் அபகரித்துக் கொண்டு போப் விடலாம் என்ற ஒர் அச்சமும் கவலையும் அவரது மனதில் இருந்தன. ஆகையால், அவரது சஞ்சலம் அப்போதும் தீராமலிருந்தது. அன்றையதினம் இரவு முழுவதும் திருவாரூரிலேயே தமக்குப் பழக்கமான ஒரிடத்தில் அவளை வைத்து மறுநாள் காலையில் அவளது பங்களாவில் கொண்டு போப் ப் பத்திரமாகச் சேர்க்கலாமா என்ற யோசனை தோன்றியது. ஆனாலும், அவளைச் சேர்ந்த மனிதர்கள் கரைகடந்த துயரமும் சஞ்சலமும் அடைந்து துன்பக் கடலில் மூழ்கித் தத்தளித்திருப்பார்கள் என்ற எண்ணம் தோன்றியது. ஆகையால், எப்பாடுபட்டாயினும் அப்போதே அந்த மடந்தையைக் கொண்டுபோய் அவளது பங்களாவில் சேர்த்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டவராய் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு நாகைப்பட்டணம் ரஸ்தாவில் வண்டியை விரைவாக ஒட்டிக்கொண்டு செல்லலானார். தமக்கு உதவியாக சில ஆட்களையும் அழைத்துக் கொண்டு போகலாமென்ற எண்ணம் தோன்றியது. ஆனாலும், அவ்வாறு ஆட்களைச் சேகரம் செய்துகொண்டு புறப்படுவதற்குள் நிரம் பவும் காலஹரணம் ஆகுமென எண்ணி உடனே தனியாகப் போய்விடுவதே உசிதமானது என நினைத்து முன்போலக் காளைகளை நன்றாக முடுக்கி ஒட்டலானார். மிகுந்த பராக்கிரமமும் பலமும் நிறைந்த அந்த எருதுகள் அம்புகள் பாய்வதுபோலக் காண்போரினது கண் பொறி தெறிக்க மகா வேகமாக ஒடிக் கால்நாழிகை நேரத்தில் ஷண்முகவடிவின் பங்களாவை அடைந்தன. அவள்சுருக்கமாகச்