பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 பூர்ணசந்திரோதயம்-2 விடுமோ என்ற ஒரு சந்தேகந்தான் என் மனசில் எழுந்து வதைக்கிறது' என்றாள். அதைக் கேட்ட இளவரசர் அசட் டு நகையாக நகைத்து, 'கண்ணே! அப்படியெல்லாம் என்னைப் பற்றித் தவறான அபிப் பிராயம் கொள்ளாதே; நான் சுய ரூபத்தோடு இங்கே வந்தால், நீ என்னை உள்ளே சேர்க்கமாட் டாய் என்று நினைத்து நான் இப்படி என்னை மறைத்துக் கொண்டு வந்தேனேயன்றி வேறல்ல. நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் மனப்பூர்வமாகச் சொன்ன வார்த்தைகளே யொழிய வேறல்ல. நான் செய்த வாக்குறுதியை நான் ஓர் இம்மியளவும் மீறி நடக்கவே மாட்டேன். அந்த விஷயத்தில் உனக்கு எப்படிப்பட்ட உறுதி வேண்டுமானாலும் நான் மறுபடியும் செய்து கொடுக்கத் தடையில்லை. நீ சொல்வதுபோல, நான் இதுவரையில் எத்தனையோ ஸ்திரீகளை முகஸ்துதி செய்திருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால், அதில் ஒரு விஷயம் இருக்கிறது. சில ஸ்திரீகள் வெளிப்பார்வைக்கு மகா அபூர்வமான அழகு வாய்ந்து கந்தருவ ஸ்திரீகள் போல இருந்தார்கள். அவர்களைக் கண்டவுடனே என் மனம் சலித்தது உண்மைதான்; நான் அவர்களை ஸ்தோத்திரம் செய்து, அவர்களுடைய சிநேகத்தைச் சம்பாதித்துக் கொண்டதும் உண்மைதான். ஆனால், ஸ்திரீகள் புருஷருடைய நீடித்த காதலையும், வேரூன்றிய பிரேமையையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமானால் அவர்களிடம் உடம்பின் அழகு ஒன்று மாத்திரம் இருப்பது போதாது. பொன்மலர் நாற்றமுடைத்து என்பது போல, வெளி அழகோடு, அவர்களிடம் உத்தம லட்சணங்களும், குணத்தழகும், நடத்தை அழகும், நயமாக வார்த்தை சொல்லும் திறமையும் புத்திசாலித்தனமும் நிறைந்திருக்க வேண்டும். அற்பத்தனம், பொறாமை,துர்க்குணம், பிடிவாதம், கோபம், மூர்க்கம் முதலிய துர்க்குணங்கள் இருக்கவே கூடாது. அப்படிப்பட்ட ஸ்திரீகள்