பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 57 அவ்விடத்தைவிட்டுப் போனவளான தான் அப்போதும் வரவில்லையே என்று நினைத்துக் கலவரம் அடைந்து, அந்த வேலைக்காரி ஒருகால் அத்தையைத் தனியாக விடுத்துவிட்டு, தன்னைத் தேடிக் கொண்டு திருவாரூருக்குப் போயிருப்பாளோ என்ற சந்தேகம் ஷண்முகவடிவின் மனதில் தோன்றியது. அந்தக் கதவிலிருந்து பூட்டை வெளிப்புறத்தில் இருந்தபடியே பூட்டினாலும் பூட்டலாம். ஆகையால், அவள் உள்ளே இருக்கிறாளோ இல்லையோ என்பதை நிச்சயிக்க மாட்டாத வளாய் அந்தப் பெண்மணி சிறிது நேரம் தயங்கி நின்றபின் தனது சந்தேகத்தை இரண்டொரு வார்த்தையில் அந்த மனிதரிடம் வெளியிட, அதைக் கேட்ட அந்தப் பேருபகாரி விரைவாக அந்த இரும்புக் கம்பிக் கதவின்மேல் ஏறி உட்புறத்தில் இறங்கி, அவ்விடத்திலிருந்து கட்டிடத்திற்குப் போனபாதை வழியாக உள்ளேபோய்க்கட்டிடத்தை அடைந்து அதன்கதவை பலமாகத் தட்டி நாலைந்துமுறை முத்தம்மாளைக் கூப்பிட, தூக்கத்தில் ஆழ்ந்து அலுத்திருந்த அந்த வேலைக்காரி திடுக்கிட்டு எழுந்து ஓடிவந்து கதவைத் திறந்து பார்க்க, வெளியில் நின்று கொண்டிருந்த அந்த யெளவனப் புருஷர், ரஸ்தாவில், அந்த வீட்டைச் சேர்ந்த பெண் வந்திருப்பதாகக் கூறி, உடனே திறவு கோலை எடுத்துக்கொண்டு வரும்படி துரிதப்படுத்த, எதிர்பாராத பரம சந்தோஷமான அந்தச் செய்தியைக்கேட்ட வேலைக்காரி குதூகலமும் பூரிப்பும் அடைந்தவளாய், 'ஆ! ஷண்முக வடிவம் மாள் திரும்பி வந்துவிட்டார்களா என்னவோ அந்தத் திருவாரூர்த் தியாகராஜப் பெருமானுடைய கிருபையாலேதான் அந்த அம்மாள் செளக்கியமாகத் திரும்பி வந்தார்கள்.ஆகா அந்தக் குழந்தை இவ்வளவு நேரமாக வரவில்லையே என்று என் மனம் பதறிப் போய்விட்டது. நான் சாயுங்காலத்திலிருந்து இதுவரையில் ரஸ்தாவுக்குப் போய்ப் போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பியது சுமார் ஆயிரம் தடவை இருக்கும். திருவாரூருக்குப் போய் ப் பார்க்க வேண்டுமென்று என் உடம்பு துடித்தது.