பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 பூர்ணசந்திரோதயம்-2 ஆனாலும், வியாதியாகப் படுத்திருக்கும் இந்த அம்மாளைத் தனியாக விட்டுப் போகக்கூடவில்லை. என்ன செய்கிறது? உண்மை என்னது என்பதை அறிய மாட்டாமல் சித்திரவதைப் பட்டு அயர்ந்து உட்கார்ந்திருந்தவள் அப்படியே தூங்கிப் போய்விட்டேன் போலிருக்கிறது. நல்லவேளையாக அந்த அம்மாள் வந்து சேர்ந்தார்களே. எல்லாம் தியாகராஜப் பெருமானுடைய கிருபை' என்று மிக மிக உருக்கமாகப் பேசிய வண்ணம் வெளிக்கதவின் திறவுகோலை கையில் எடுத்துக் கொண்டு அந்தப் புருஷரைத் தொடர்ந்து கட்டிடத்தை விட்டு வெளிப்பட்டு விரைவாக நடந்து இரும்புக் கம்பிக் கதவண்டை போய்ச் சேர்ந்தாள். அவளைக் கண்ட ஷண்முக வடிவு தாயைப் பிரிந்து கண்ட கன்று போல மிகுந்த ஆவலோடும் வாஞ்சையோடும் ஒலமிட்டு அலறி, 'முத்தம்மா இன்றைய தினம் நான் எப்படிப்பட்ட அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டேன் தெரியுமா அடாடா இன்றைய தினம் நான் பிழைத்து வந்ததைப் புனர் ஜென்மம் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாம் அந்தத் தியாகராஜப் பெருமானுடைய அருளாலும் இதோ இருக்கும் இந்தப் புண்ணிய புருஷருடைய செளகரியத்தினாலும் தயாள குணத்தினாலுமே நான் உயிர் பெற்று வந்து சேர்ந்தேன். இவர்கள் நல்ல சமயத்தில் வந்திராவிட்டால் இந்நேரம் என்னுடைய உயிரேபோயிருக்கும். நான் உன்னையாவது அத்தையையாவது, அக்காளையாவது மறுபடியும் பார்க்கவே அதிர்ஷ்டமில்லாமல் போயிருக்கும்' என்று அளவில் அடங்கா நன்றியறிதலின் பெருக்கினால் மலர்ந்த முகத்தோடும், உருகி நைந்திளகிய மனத்தோடும் கூற, அதற்குள் முத்தம்மாள் கதவைத் திறந்துவிட ஷண்முகவடிவு மிகுந்த ஆவலோடும் நாணிக்குனிந்த சிரமத்தோடும் உள்ளே புகுந்து கட்டிடத்தை நோக்கி நடக்கலானாள். அந்த அபாயத்திலிருந்துதன்னைக் காப்பாற்றிய மனிதர் வேலைக்காரி யோடு உள்ளே வருவாரென்றும், வந்தவுடன் அவளைக் கொண்டு அவரது வரலாற்றை விசாரித்து அறிந்துகொண்டு