பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 பூர்ணசந்திரோதயம்-2 அப்படித்தான் அவரை அனுப்பி விட்டு வந்தாயே, அந்த ஐயா யார் என்பதையும், அவர் இருக்கும் இடத்தையுமாவது கேட்டு அறிந்து கொண்டு வந்தாயா?" என்று சகிக்க வொண்ணாத துயரத்தோடும் கலக்கத்தோடும் ஷண்முகவடிவு கூறினாள். அதைக்கேட்ட முத்தம் மாளினது முகமும் வாட்டம் அடைந்தது. அந்த விஷயத்தில் தானும் தவறு செய்துவிட்டதாக உணர்ந்து அவளும் சஞ்சலத்திற்கு ஆளானாள். அவளது மனதும் கண்களும் கலங்கின. அவள் நிரம்பவும் விசனமான குரலோடு பணிவாகப் பேசத் தொடங்கி, 'இல்லையம்மா! நானும் ஏமாறிப் போய்விட்டேன். அவருடைய பெயர் விலாசம் முதலிய விவரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் என்று நினைத்து அல்லவா நான் ஏமாறிப் போய்விட்டேன், இல்லாவிட்டால் அந்த விவரத்தையாவது கேட்டுக் கொண்டு வந்திருப்பேனே அவருடைய உடம்பு பதைத்த பதைப்பி விருந்து அவர் நிரம் பவும் அவசரமாக எங்கேயோ போக வேண்டியவராகத்தான் காணப்பட்டார். நானோ, அல்லது, நீங்களோ எவ்வளவுதான் வற்புறுத்தி உபசரித்து இறைஞ்சி வேண்டிக்கொண்டிருந்தாலும் அவர் இந்தச் சந்தர்ப்பத்தில் உள்ளே வந்திருக்கவே மாட்டார். எப்படியிருந்தாலும், அவர் மறுபடியும் இவ்விடத்துக்கு வருவார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அதைப் பற்றி நீங்கள் கவலையே கொள்ள வேண்டாம். அவரைப் பார்த்தால் மகா தயாளகுணம் உள்ளவராகக் காணப்படுகிறார்! நம்மைப் பற்றி அவர் தவறாகவும் நினைக்க மாட்டார்; நம்மை இவ்வளவோடு அசட்டையாக மறந்துவிடவும் மாட்டார்; எப்படியும் வந்தே தீருவார். அது இருக்கட்டும்; நீங்கள் பாங்கியில் பணம் வாங்கப் போனவர்கள் திருத்தருப்பூண்டிப் பாதையில் முரடர்களுடைய கையில் அகப்பட்டுக் கொள்ள வேண்டிய முகாந்திரம் என்ன?" எனறாள. அதைக்கேட்ட ஷண்முக வடிவு தான் அன்றைய தினம்