பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 63 பகலில் திருவாரூர் பாங்கிக்குப் போனதுமுதல் தான்.அப்போது வீட்டிற்குத் திரும்பி வந்தது வரையில் தனக்கு நேர்ந்த மகா பயங்கரமான அபாயங்களின் விவரத்தையெல்லாம் தனது வேலைக்காரியினிடத்தில் சுருக்கமாக எடுத்துக்கூற, அந்த பயங்கரமான வரலாற்றைக் கேட்டுக்கொண்டு வரும்போதே, முத்தம் மாளினது மனதில் பெருத்த திகிலும் சஞ்சலமும் உண்டாயின. அவளது உடம்பு அடிக்கடி திடுக்கு திடுக்கென்று நடுங்கியது; உரோமம் சிலிர்த்தது. அன்றையதினம் ஷண்முக வடிவு தனது கற்பையும் உயிரையும் காப்பாற்றிக் கொண்டது தெய்வ சகாயத்தினாலேயே அன்றி வேறு அல்ல என்ற உறுதி தோன்றியது. கபடசன்னியாசியும், மற்ற முரடர்களும் தாங்கள் ஆண் துணையின்றித் தனியாக இருப்பதை அறிவார்கள். ஆதலால், அவர்கள் மறுபடியும் சரியான பக்க பலத்தோடு பங்களாவிற்கு வந்து ஏதேனும் துன்பம் இழைக்கப் போகிறார்களே என்ற பெரும் பீதியும் கவலையும் எழுந்து வதைக்கத் தொடங்கின. அவள் உடனே ஷண்முகவடிவைப் பார்த்து 'அடடா இந்த விவரமெல்லாம் எனக்கு அந்த ரஸ்தாவிலேயே தெரியாமல் போய்விட்டதே தெரிந்திருந்தால், உங்களைக் காப்பாற்றி அழைத்துக் கொண்டுவந்த அந்த மனிதரிடம் நம்முடைய வரலாறுகளையெல்லாம் சொல்லி யிருக்கலாமே. நாம் ஆண்துணையின்றித்தனியாக இருப்பதால், அந்தப் பண்டாரமும், மற்றவர்களும் வந்து உபத்திரவிப்பார் களோ என்று நாம் கவலைப்படுவதாக அவரிடம் தெரிவித்தால், அவர் அதற்குத் தகுந்தபடி ஏதாவது சரியான ஏற்பாடு செய்வார். அவரே நேரில் இங்கே இருந்து நம்மைப் பாதுகாக்க முடியாவிட்டாலும், வேறே ஆள்கள் யாரையாவது அமர்த்தியாவது வைத்துவிட்டுப் போவார். இப்போது அவருக்கும் நம்முடைய நிலைமை இன்னது என்பதே தெரியாது. நமக்கும் அவர் யார் என்பது முதலிய எந்த விவரமும் தெரியாமல் போய்விட்டது. இந்த அகாலத்தில் நாம் பக்கத்திலுள்ளவீடுகளுக்குப் போய்த்துணைக்கு மனிதரை 站。守厦一5