பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84 பூர்ணசந்திரோதயம்-2 அழைத்துக்கொண்டு வருவதும் துர்லபமான காரியமாக இருக்கிறது” என்று மிகுந்த கவலையோடும் சஞ்சலத்தோடும் கூறினாள். அவளது சொற்களைக் கேட்ட இளநங்கை, 'இன்று சாயுங்காலத்துக்குப் பிறகு எனக்கு நேர்ந்த மகா பயங்கரமான அபாய நிலைமைகளிலிருந்து நான் எப்படித் தப்பி வீடு வந்து சேரப்போகிறேன் என்று நான் பட்டுக்கொண்டிருந்த கவலையும் வேதனையும் அளவில் அடங்குமா! அப்படிப்பட்ட நம்பிக்கை யுற்ற ஆபத்து சமயத்தில் தோன்றாத் துணைவனாக இருந்து என்னைக் காப்பாற்றி இங்கே கொண்டு வந்து சேர்த்த சர்வேசுவரன் இனிமேல் மாத்திரம் நம்மைக் கைவிட்டுவிடப் போகிறானா? ஒருநாளும் கைவிடமாட்டான். இருந்தாலும், நான் இந்தப் பேருபகாரியின் விஷயத்தில் பெருத்த அபராதி யாகிவிட்டேன். ரஸ்தாவிலிருந்து நான் உள்ளே வரும்போது அவரை உபசரித்து உள்ளே அழைக்கவில்லை என்றும், நான் என்னுடைய நன்றி விசுவாசத்தைத் தக்கபடி வெளியிடவில்லை என்றும் நினைத்து என்மேல் ஆயாசப்பட்டு அவர் போய்விட்டார் என்பதும் தெரியவில்லை. அல்லது உண்மை யிலேயே அவசர வேலையின் நிமித்தம் போனார் என்பதும் தெரியவில்லை. எவ்வளவுதான் அவசரமான வேலையிருந் தாலும், எனக்காக இவ்வளவு தூரம் பாடுபட்டு இவ்வளவு பொழுதை விரயம் செய்த அந்த மனிதர் இன்னம் அரைக்கால் நாழிகை நேரம் இருந்து நம்முடைய வரலாற்றை அறிந்து கொண்டு போவது ஒரு பொருட்டா! ஆகையால், அவர் என்னுடைய நடத்தையைப்பற்றி ஆயாசமடைந்தே போயிருக்க வேண்டும் என்று என் மனம் ஒருவாறு சந்தேகப்படுகிறது. மொத்தத்தில், நான் கொஞ்சம் ஏமாறிப் போனேன்; அதன் பலனை நாம் இப்போது அனுபவிக்கிறோம்" என்று மிகுந்த துயரத்தோடும் சஞ்சலத்தோடும் கூறினாள். அதன்பிறகு గ్స 冷 په 哆 g 论 冷 ॐ வேலைக்காரியினது வற்புறுத்தலைத் தடுக்க மாட்டாமல்,