பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பூர்ணசந்திரோதயம்-2 முடிவில் ஒரு வழிப்போக்கரால் தான் காப்பாற்றப்பட்டது முதலிய விவரங்களை எல்லாம் அவள் அந்தக் கடிதத்தில் எழுதி, அதைக் கொண்டுபோய்த் திருவாரூர்த் தபால் சாலையில் போட்டுவிட்டு உடனே வந்து விடும்படியாகவும், அப்படி வரும்போது இரண்டொரு ஆண் பிள்ளைகளுக்கு ஏதாவது பணம் கொடுப்பதாகப் பேசி அவர்களை இராத்திரி காலத்தில் காவலாக இருக்க அழைத்து வரும்படி சொல்லி அனுப்பினாள். அன்று அஸ்தமன வேளை ஆவதற்கு முன் தான் திரும்பி வந்து விடுவதாக உறுதி கூறிவிட்டு வேலைக்காரி பங்களாவை விட்டு வெளிப்பட்டுத் திருவாரூரை நோக்கிப் போய்விட்டாள். ஷண்முகவடிவு அடிக்கடி தனது அத்தையின் தேக செளகரியங்களைக் கவனித்தவளாய் நிரம் பவும் கவலையும் சலனமும் அடைந்து ஒரிடத்தில் இருக்கை கொள்ளாமல் அங்குமிங்கும் போய் வந்து கொண்டிருந்தாள். பகற்பொழுதில் முன் பக்கத்து இரும்புக் கம்பிக் கதவுகள் மூடித் தாளிடாமல் விடப்பட்டிருப்பது வழக்கம். அதுபோலவே, கதவுகள் அன்றையதினம் மூடி வைக்கப்பட்டிருந்தன. பேதை மடவன்னமான ஷண்முகவடிவு அரைநாழிகைக்கு ஒருதரம் இரும்புக் கதவண்டை போய் முத்தம்மாள் வருகிறாளா என்று பார்ப்பதும், உடனே திரும்பிக் கலாபமயில் போலக் கண்கொள்ளா எழில் வடிவம் தாங்கி மிருதுவாக நடந்து உட்புறம் போய்த் தனது அத்தையைக் கவனிப்பதும், பிறகு கூடத்திலிருந்த விசிப்பலகையின் மேல் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்ளுவதுமாக இருந்தாள். முந்திய நாளிரவில் எதிர்பார்க்காதபடி தோன்றித் தனக்கு உயிர் கொடுத்த மகா புண்ணியவானான அந்த உத்தமகுண சீலர் தன்மீது ஆயாசமடைந்து தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டதை நினைத்து நினைத்து அடிக்கடி கலங்கி விசனித்தவளாய் இருக்க, அவள் இருந்தகட்டிடத்தின் முன்புறத்