பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 69 தாழ்வாரத்தில் ஜோடுகள் போட்டுக்கொண்டு சடக்சடக்கென்று யாரோ மனிதர் நடந்து வந்த ஒசை கேட்டது. என்றைக்கும் இல்லாமல் அன்றையதினம் அம்மாதிரி ஒசை செய்து நடந்து வந்த மனிதர் யாராயிருப்பார் என்ற சிந்தனையும் வியப்பும் உண்டாய் அவளது மனதைக் கவர்ந்து கொண்டன. அவள் கரைகடந்த கலக்கமும் கட்டுக்கடங்காத சஞ்சலமும் கொண்டவளாய் விசிப்பலகையிலிருந்து சடக்கென்று எழுந்து வாசற் படியை நோக்கி வந்து, உட்புறத்தில் நின்றபடி தனது சிரத்தை நீட்டி வெளியில் பார்த்தாள். பார்க்கவே, அவளது கண்கள் மழுங்கிப் போயின. மனம் பிரமிப்பை அடைந்து கலங்கின. அவள் பிரமாதமான வியப்பும் திக் பிரமையும் அடைந்தவளாய், தான் என்ன செய்வது என்பதை அறியாமல் குழப்பமடைந்து ஸ்தம்பித்து சித்திரப் பதுமை போல வெட்கித் தலைகுனிந்தபடி நின்றுவிட்டாள். தாழ்வாரத்தின் வழியாக நடந்து அவள் இருந்த வாசற் படியை நோக்கி வந்த மனிதர் சுமார் இருபத்திரண்டு வயது அடைந்த ஒரு யெளவனப் புருஷர். அவர் பத்தரைமாற்றுப் பைம் பொன்னைப் பழித்த சிவந்த பளபளப்பான மேனியையும், மாரனோ, ராஜகுமாரனோ என்று காண்போர் ஐயுறத்தக்க மகாஅற்புதமான கட்டழகையும், முகவசீகரத்தையும் பெற்றவனாய், ஒரு பெருத்த தணிகரது செல்வக் குமாரன் போலக் காணப்பட்டான். அவனது செவிகளில் இருந்த வைரக்கடுக்கன்களும், உடம் பிலிருந்த பட்டாடைகளும் ஜரிகை வஸ்திரங்களும் வெல் வெட்டு ஜோடுகளும், இயற்கையிலேயே அழகு வழிந்த அவனது சுந்தரமேனியின் தேஜசை ஆயிரமடங்கு சிறப்பித்து ஜாஜ் வல்யமாகத் தோன்றும் படிச் செய்தன. கருத்தடர்ந்து சுருட்டை விழுந்திருந்த அவனது சிகையை அவன் முடிந்து விட்டிருந்தது ஒரு தேங்காய் அளவு பருத்திருந்தது, அவனது பின்னழகைக் கண்கொள்ளா அழகாகச் செய்தது; புருவ விற்களின் செறிவும் விசாலமாகப் பரந்த தெளிவான கண்களின் ஜ்வலிப்பும், மூக்கின் சொகுசும், பற்களின் கவர்ச்சியும்,