பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 பூர்ணசந்திரோதயம்-2 கன்னங்களின் குழிவுகளும் ஒன்றுகூடி அவனைக் காண்போர் ஆண்பாலரேனும் பெண்பாலரேனும் ஒரே பார்வையில் அவனுக்கு அடிமையாகும்படி செய்யத்தக்கனவாக இருந்தன. அதோடு, இளமையும், பலமும் கம்பீரமும் நிறைந்த அவனது அழகிய உடம்பு அச்சில் கடைந்தெடுக்கப்பட்டது போல வெகு சுத்தமாக அமைந்திருந்தமையால், அவனது அங்கங்களில் எந்தப் பாகத்திலும் ஓர் அணுவை எடுத்து வேறுவிதமாக அமைத்தாலும், அந்த மேனியின் அழகும் கவர்ச்சியும் குறைந்துபோகக் கூடியதாக இருந்தனவேயன்றி, அதிகரிக்கத் தக்கனவாக இல்லை. அப்படிப்பட்ட மகா அருமையான சிங்காரபுருஷரை நமது ஷண்முகவடிவு எப்போதுமே கண்டதில்லை. ஆகையால், அவர் யாராக இருக்கலாம் என்று அவள் எவ்வளவோ தூரம் ஆழ்ந்து யோசித்துப் பார்த்த தெல்லாம் வீணாயிற்று. காலை நேரத்தில் இளஞ்சூரியனைக் கண்ட கண்கள் எவ்விடத்தில் திரும்பிப் பார்த்தாலும் கோடாதுகோடி சூரிய பிம்பங்களே தோன்றுவது போல, மகா தேஜோமயமாகத் தோன்றிய அந்த யெளவன மன்மதனை ஒருதரம் பார்த்துவிட்டு அந்த இன்ப வல்லி கீழே குனிந்துகொண்டாள். ஆனாலும், அவனது குளிர்ந்த இனிய வடிவம் அவளது அகக்கண்ணிலும் உணர்விலும் நிறைந்து நீங்காமலேயே நின்று கொண்டிருந்தது. தன்னை அறியாமல் அவளது மனதில் ஒருவித வாத்சல்யமும் பிரேமையும் நெகிழ்வும் உருக்கமும் தோன்ற ஆரம்பித்தன. அவரது அற்புத மேனியை இன்னொரு தரம் தான் பார்க்கவேண்டும் என்ற ஒருவித தாகம் அவளது மனதில் உண்டானது. ஆனாலும், அன்னியபுருஷரான அவரைத் தான் ஏறிட்டுப் பார்ப்பது தவறு என்ற எண்ணமும் கட்டிலடங்கா நாணமும் எழுந்து அவளது முகத்தைக் கீழே கவிழ்த்தபடி வைத்திருந்தன. அப்படி வந்த மன்மத புருஷனைத் தான் எவ்வாறு உபசரிப்பது என்பதை அறியாதவளர்ய்த் தத்தளித்து அந்தப் பெண்மணி நிற்க அந்த யெளவனப் புருஷனும் அவளோடு