பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 71 என்னவிதமாகப் பேசுவது என்பதை அறியாமல் குழப்பம் அடைந்து பேசாமல் சிறிது தூரத்தில் நின்றுவிட்டான். ஒருவரோடு ஒருவர் பேச அறியாமல் வெட்கி அவர்கள் இருவரும் ஐந்து நிமிஷ நேரம் வரையில் சித்திரப் பதுமைகள் போல மெளனமாக நின்றனர். அதற்கு மேலும் தான் அப்படி நிற்பது சரியல்லவென்று நினைத்த அந்த அழகன் கீழே குனிந்தபடி அவளிடம் அன்பாகப் பேசத் தொடங்கி, "இந்த பங்களாவில் ஒரு வேலைக்காரி இருந்தாளே, அவள் எங்கே இருக்கிறாள்? இப்போது இங்கே இல்லையோ?” என்று இனிமையான குரலாக வினவினான். அதைக் கேட்ட பெண்மணி அவருக்கு எப்படி மறுமொழி சொல்வது என்று நினைத்து மிகுந்த லஜ்ஜையடைந்த வளாய்ச் சிறிதுநேரம் தத்தளித்தாள். ஆனாலும், அந்தக் குடும்பத்தில் வேறே மனிதர் இல்லாதிருப்பது பற்றிதான் அவரோடு பேசியே தீரவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தவளாய், கீழே குனிந்தபடி கனியோ, பாகோ, தேனோ, அமிர்தமோ என உவமிக்கத் தக்க இனிமையான குரலில் மிருதுவாகப் பேசத் தொடங்கி, ‘வேலைக்காரி திருவாரூருக்குப் போயிருக்கிறாள்; இன்னம் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவாள். தாங்கள் அவளைப் பார்க்க வேண்டுமானால், இப்படி வந்து விசிப்பலகையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். அவள் சீக்கிரமாக வந்துவிடுவாள். அல்லது, தங்களுக்கு இருக்க அவகாச மில்லாவிட்டால் தாங்கள் யார் என்பதையும் அவளிடத்தில் ஆக வேண்டிய காரியம் இன்னது என்பதையும் என்னிடம் தெரிவிக்கலாமானால் தெரிவியுங்கள்; அவள் வந்தவுடனே நான் அவளிடம் சங்கதியைச் சொல்லுகிறேன்'என்று கூறினாள். அவ்வாறு அந்த ஏந்தெழில் மடந்தை சொற்ப வார்த்தைகள் பேசி முடிப்பதற்குள் நாண மேலீட்டால் அவளது அங்கங்கள் தத்தளித்துத் தடுமாறி மிகவும் குன்றிப் போயின. அவளது அழகிய முகம் பலவித மாறுபாடுகளை அடைந்தன.