பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பூர்ணசந்திரோதயம்-2 அவ்வாறு அந்த வடிவழகி பேசி முடித்ததைக் கேட்ட அந்த சுந்தரபுருஷன் முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. புன்னகை அரும்பி இனிமையை அள்ளி வீசியது. அவன் கீழே குனிந்தபடி குதூகலமாகப் பேசத் தொடங்கி, "ஒகோ அப்படியா வேலைக்காரி திருவாரூருக்கா போயிருக்கிறாள். இருக்கட்டும்; நான் மறுபடியும் வந்து அவளைப் பார்க்கிறேன். நான் யார் என்ற அடையாளம் உனக்குத் தெரியவில்லை போலிருக்கிறது. நிஜந்தான்; உனக்குத் தெரிய நியாயமில்லை. நீ என்னை கடைசி வரையில் ஏறெடுத்தே பார்க்கவில்லை அல்லவா! அதுவும் தவிர, இருளும் அதிகமாக இருந்தது. அந்தத் துஷ்டர்களிடம் அகப்பட்டுக் கொண்டோமே என்றும், 72 அவர்கள் என்னவிதமான கெடுதல் செய்வார்களோ என்றும் திகில் கொண்டு கலங்கியிருந்த காலத்தில் நீ என்னை நன்றாகப் பார்க்கவேண்டிய பிரமேயமே இல்லை' என்றான். அவனது சொற்களைக் கேட்டவுடனே ஷண்முகவடிவினது நெஞ்சம் திடுக்கிட்டது. உடம்பு முழுவதும் உரோமம் சிலிர்க்க ஆனந்தம் பரவியது. இன்னது என்று விவரிக்க இயலாத ஒருவித சஞ்சலமும், இன்ப ஊற்றும் அவளது மனத்தில் பெருக்கெடுத்தன. முதல் நாளிரவில் வண்டியில் வந்து முரடர்களோடு சண்டை செய்து தன்னை மீட்டுக் கொண்டுவந்து தனது பங்களாவில் விட்டுப்போன மனிதரை அவள் கடைசிவரையில் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. ஆகையாலும், அவள் கடைக்கண்ணால் இருளில் அவரை சொற்பமே பார்த்தாள். ஆகையாலும், அந்த மனிதர் மத்திய பருவத்துப் புருஷரென்று அவள் மறுநாட் பகல் முழுதும் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆகையால், சுமார் இருபத்திரண்டு வயதேயுள்ள யுவராஜன் போன்ற பாலியப் பருவத்து மன்மத புருஷன் தனக்கு எதிரில் வந்தபோது, அவனுக்கும் முதல் நாள் இரவில் தன்னைக் காப்பாற்றிய மனிதருக்கும் எவ்விதச் சம்பந்தமும் இருக்கும் என்பது அவளுக்குச் சிறிதும் தோன்றவில்லை. ஆனால், அந்த