பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 75 தாங்கள் நிற்கக்கூடாது. தயை செய்து உள்ளே கூடத்துக்கு வந்து விசிப் பலகையில் மேல் உட்கார்ந்து கொள்ளுங்கள். தங்களைத் தக்கபடி உபசரிக்க இந்தக் குடும் பத்தில் இப்போது பெரியவர்கள் யாருமில்லை. என்னுடைய அக்காள் தஞ்சைக்குப் போயிருக்கிறாள். எங்களுக்குத் தாய் தகப்பன்மார் இல்லை. எங்கள் இருவரையும் காப்பாற்றி வந்த அத்தை பகடிவாத நோயிற் பட்டு வாயடைத்து அசைவற்றுக் கிடக்கி றார்கள். ஆகையால், நான் சிறு வயதுள்ளவளாக இருந்தும், இந்தக் குடும்பத்தின் சகலமான காரியங்களையும் பொறுப்பை யும் நானே ஏற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது. எப்படிப்பட்ட மனிதர்கள் வந்தாலும் நான்தான் அவர்களை உபசரித்து வரவேற்று அவர்களுடன் பேசி அனுப்ப வேண்டியிருக்கிறது. என்ன செய்கிறது. அநாதையாக இருப்போர் அறியாத பெண்ணாக இருந்தாலும், சிறு குழந்தையாக இருந்தாலும் அவர்களுடைய காரியத்தை அவர்கள்தானே செய்துகொள்ள வேண்டும்’ என்றாள். அவளது கனிவான மொழிகளைக் கேட்ட அந்த மன்மத புருஷன், அவளது விஷயத்தில் மிகுந்த இரக்கமும் அதுதாபமும் இளக்கமும் கொண்டவனாய்த் தனது கால் ஜோட்டைத் தாழ்வாரத்தில் கழற்றி வைத்துவிட்டு கூடத்திற்கு வந்து அங்கே கிடந்த விசிப் பலகையின் மீது உட்கார்ந்து கொண்டான். அவன் உள்ளே வருவதைக் கண்ட இளநங்கை பக்கத்தில் இருந்த ஒர் அறைக்குள்போய் மறைந்தும் தென்பட்டும் நிலைப் படியின் பக்கத்தில் நின்றாள். அப்படி உட்கார்ந்துகொண்ட அந்த யெளவனப் புருஷன் அந்த அணங்கு பக்கத்து அறையில் நிற்கிறாள் என்பதை அறிந்து கொண்டவனாய் மிகுந்த வாத்சல்யத்தோடு பரிவாகப் பேசத் தொடங்கி, 'அம்மா! நீ சொன்ன வரலாற்றைக் கேட்க, என்மனசு தவிக்கிறது. பரம துஷ்டர்கள் நிறைந்த இந்த இடத்தில் ஆண் துணையின்றி நீங்கள் இருப்பதாகச்சொல்வதைக் கேட்க எனக்கு