பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. பூர்ணசந்திரோதயம்-2 தமது ஆசனத்தை விட்டு எழுந்து, பூர்ணசந்திரோதயம் நின்ற இடத்திற்குப்போய், மிகுந்த ஆவலோடு அவளைப் பிடித்து இழுத்து மார்போடு அனைத்து ஆலிங்கனம் செய்து முத்தமிட்டு சரஸ் லீலைகள் புரியத் தொடங்க, தனது கோமளகரமான அற்புத மோகன வடிவத்தைச் சிறிது நேரம் வரையில் அவரது வசத்தில் விட்டு, செயலற்றுத் தத்தளித்து நாணத்தினாலும், வெட்கத்தினாலும் குன்றிக் குறுகி நின்ற பூர்ணசந்திரோதயம், திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு சடேரென்று தன்னை அவரது பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு விலகி, தனது உடம்பில் விஷமம் செய்ய நீண்ட அவரது கரங்களைத் தனது இரண்டு கரங்களாலும் இறுகப் பிடித்துக்கொண்டு தனது வசீகரமான பல்வரிசைகளைக்காட்டி இனிமையாகக் கொஞ்சிக் கொஞ்சி, 'போதும், போதும் நிறுத்துங்கள். அப்புறம் ஆகட்டும். அவசரப் படவேண்டாம். பக்கத்தில் என்னுடைய வேலைக் காரிகள் இருக்கிறார்கள். நீங்கள் யாரோ பெண்பிள்ளை யென்று அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பதால், அவர்கள் எந்த நிமிஷத்திலும் இங்கே வருவார்கள். நீங்களும் நானும் பட்டப்பகலில் இப்படித்தனியாக இருந்து இப்படிப்பட்ட தகாத காரியம் செய்து கொண்டிருப்பதைக் கண்டால், அவர்கள் என்னைப் பற்றியும் தங்களைப்பற்றியும் இழிவாகப் பேசி, அவதூறான வார்த்தைகளை ஊர் முழுதும் விதைத்து விடுவார்கள். ஆகையால், இந்த மாளிகையில் நாம் எதையும் செய்யவே கூடாது. அங்கியால் மறைத்துக்கொண்டு வந்தது உண்மையில் தாங்கள் என்பதுகூட இவர்களுக்குத் தெரியக் கூடாது. ஆகையால், தாங்கள் என்மேல் தயை பாலித்து மறுபடியும் அங்கியால் தங்களை மறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நான் ஆயிரங்கோடி நமஸ்காரம் செய்கிறேன். இப்போது தாங்கள் என்மானத்தைக் காப்பாற்ற வேண்டும். நான் இனி எப்போதும் தங்களுடைய அடிமை என்பதைத் தாங்கள் நிச்சயமாக நம்பலாம். தங்களுடைய மனம் போல நான்