பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்ணசந்திரோதயம்-2 s-كو 76 நிரம்பவும் விசனமாக இருக்கிறது. நேற்றைய தினம் ராத்திரி உள்ளே வரும்படி நீ என்னை அழைக்கவில்லையென்று நினைத்து உன்மேல் ஆயாசப்பட்டு நான் அப்படியே போய்விட்டதாக நீ நினைத்துக் கவலைப்படுகிறாய் போல் இருக்கிறது. அப்படி நினைப்பது சரியல்ல. நேற்றையதினம் ராத்திரி நான் பொன்னிரைக்கு நிரம்பவும் அவசரமான ஒரு காரியத்தை உத்தேசித்துப் போனேன். என்னுடைய பள்ளிக்கூடத்து சிநேகிதன் ஒருவன் அந்த ஊரில் காயலாவாகப் படுத்திருந்தான். நேற்று சாயுங்காலம் அவனுடைய தேகஸ்திதி முற்றிலும் அபாயமானதாக இருக்கிறது என்றும், உடனே புறப்பட்டு வந்தால் அன்றி கடைசியான முகமுழிப்புக்கூடக் கிடைக்காது என்றும் எனக்குச் செய்தி கிடைத்தது. அது கிடைத்தவுடனே நான்திருவாரூரிலிருந்து புறப்பட்டு வந்தேன். வந்த வழியில் உனக்கு ஏற்பட்ட அபாயத்தைக் கண்டு உடனே உன்னை விடுவித்து உன்னுடைய ஜாகையில் கொண்டுவந்து சேர்த்துவிட்டு நான் மறுபடியும் காளைகளை முடுக்கி வண்டியை வேகமாக ஒட்டிக் கொண்டு அவ்விடம் போக நேர்ந்தது. நேற்று நான் பொன்னிரைக்குப் போன ஆத்திரத்தில், என்னுடைய சொந்த மனிதரின் உயிர் போவதாக இருந்தாலும் அதைக்கூட மதித்து அதன் பொருட்டு ஒரு நிமிஷமும் தாமதியாமல் நான் பொன்னிரைக்குப் போப் என்னுடைய பிரான சிநேகிதனுடைய முகத்தில் கடைசியாக விழித்து அவனுடன் ஒரு வார்த்தையாவது பேசியிருப்பேன். ஆனால், நீ இருந்த அபாயமான நிலைமையை உணர்ந்தபிறகு, உன்னைக் காப்பாற்றாமல் போக எனக்கு மனம் வரவில்லை. ஆகையால், உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தேன். நான் உள்ளே வந்தால் நீயும் உன்னுடைய மனிதர்களும் நான் செய்த உதவிக்காக எனக்கு உபசார வார்த்தைகள் சொல் வீர்கள் என்பதும், நான் கொஞ்சநேரமாவது இங்கே இருக்க நேரும் என்பதும் எனக்குத் தெரியும். அப்படிக் காலஹரணம் செய்தபின் அதற்கு மேல் புறப்பட்டுப் பொன்னிரைக்குப்