பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 பூர்ணசந்திரோதயம்-2 ஆள்களையும் அமர்த்தி வைத்துவிட்டுப் போயிருக்கிறீர்கள். அவைகளையெல்லாம் அறிந்துகொள்ளும் திறமையற்றவளாய் நான் தங்களைப் பற்றித் தவறாக நினைத்துக் கொண்டது என்னுடைய மதியினமே ஒழிய வேறல்ல. நான் தங்களை உபசரித்து உள்ளே அழைக்காதது ஒரு பெரிய குற்றம்; அதோடு நிற்காமல் தாங்கள் என்பேரிற் ஆயாசப்பட்டுக் கொண்டு போயிருப்பீர்கள் என்று நினைத்தது, தங்களுடைய பெருந்தன்மையை நான் உள்ளபடி அறியாமல் அதைக் களங்கப் படுத்திய குற்றமாகி விட்டது. எப்போதும் ஆண்பிள்ளைகளின் புத்தி கண்ணியமானதுதான், மூடப் பெண்பிள்ளைகளின் புத்தி அற்ப புத்திதான். விடியற்காலம் எழுந்து வெளியில் வந்த என்னுடைய வேலைக்காரி ரஸ்தாவில் கையும் தடியுமாக ஆள்கள் நின்றதைக் கண்டு, அவர்கிள் நமக்கு அநுகூலமாக வந்தவர்கள் என்பதை அறிந்துகொள்ள மாட்டாமல் அவர்கள் அந்த வேஷக்காரச் சாமியாருடைய ஆள்களாக இருப்பரோ என்று பயந்து ஓடிவந்து என்னிடம் அந்த சங்கதியைத் தெரிவித்தாள். நானும் அப்படியே நினைத்து விட்டேன். நாங்கள் இரண்டு பேரும் பொழுது விடிந்து நெடுநேரம் வரையில் வெளியில் வராமல் உள்ளேயே ஒளிந்து கொண்டிருந்தோம்' என்றாள். அதைக் கேட்ட யெளவனப் புருஷன் பதைத்துப்போய், 'அடாடா! அப்படியா சங்கதி அந்த விஷயத்தில் நான் ஒரு காரியம் செய்யாமல் போய்விட்டேன். அந்த ஆள்களை நான் அனுப்பியபோது, அவர்களை நீங்கள் கண்டால், தாங்கள் இன்னார் என்பதை உங்களிடம் சொல்லும்படி நான் அவர்களுக்கு எச்சரித்து வைத்திருக்கலாம். பொன்னிரைக்குப்போகும் அவசரத்தில் எனக்கு இப்படிப்பட்ட யோசனை ஒன்றும் தோன்றவில்லை. மனப்பூர்வமாக நான் உங்களுக்கு உபகாரம் செய்ய எண்ணி ஆள்களை அனுப்பியிருந்தும், அது அபகாரமாக முடிந்துவிட்டது போல் இருக்கிறது" என்று அநுதாபத்தோடு பேசினான்.