பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 81 படுவாய் என்பதை நினையாமல், நான் உண்மையை அப்படியே உன்னிடம் வெளியிட்டது தவறு என நினைக்கிறேன். நானும் அவனும் எவ்வளவு காலம் வரையில்தான் ஒருவரையொருவர் பார்க்கலாம் என்ற விதி ஏற்பட்டிருக்கிறதோ, அவ்வளவு வரையில்தான் அது கிடைக்கும். அதற்கு மிஞ்சி அதிகமாக நாங்கள் அடைய விரும்பினால், அது பலிதமாகாது அல்லவா! அதைத் தடுப்பதற்கு நீ காரணபூதமாக இல்லாவிட்டாலும், இன்னம் வேறே யாராவது இருந்தே தீருவார்கள். அகாரணமாக வேறு ஒருவரால் இந்தத் தடை ஏற்படாமல் இப்படிப்பட்ட மகாபயங்கரமான அபாயத்தில் இருந்த உன்னைக் காப்பாற்றும் படியான பரோபகாரமான காரியத்தைச் செய்ததால் அந்த இடையூறு ஏற்பட்டது என்பது எவ்வளவு சிரேஷ்டமான காரியம். இதனால் எனக்குக் கிடைக்கும் புண்ணியத்தையும், நான் என்னுடைய நண்பனைப் பார்க்கக்கூடாமல் போனதனால் இழந்த மனத்திருப்தியையும் ஒத்திட்டுப் பார்த்தால், உனக்கு உதவி செய்ததால் எனக்குக் கிடைக்கும் புண்ணியமே அபாரமானதாக இருக்கும். அதோடு, என்னுடைய நண்பனுடைய ஆத்மா நான் உனக்குச் செய்த உதவி எப்படிப் பட்டது என்பதை அறியுமாகில், அந்த விஷயத்தில் அளவற்ற ஆனந்தம் அடைந்து என்னைப் புகழுமன்றி உன்னைச் சபிக்கவே நியாயமில்லை. என்னுடைய நண்பன் ஈற் குணங்களுக்கும் ஜீவகாருண்யத்துக்கும் இருப்பிடமானவன். அவனுடைய ஆத்மா ஒருநாளும் தவறாக எண்ணாதென்பதை நீ உறுதியாக நம்பலாம்' என்றான். அதன்பிறகு சிறிது நேரம் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உபசார வார்த்தைகள் கூறிப் புகழ்ந்தபின் தங்கள் தங்களது விருத்தாந்தங்களை வெளியிடலாயினர். ஷண்முகவடிவு தனது குடும்ப வரலாறுகளையெல்லாம் ஆதியோடந்தமாக எடுத்துக் கூறினாள். நெடுங்காலமாகத் தன்னையும் தனது அக்காளையும் தங்களது அத்தை மிகவும்