பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84 பூர்ணசந்திரோதயம்-2 மாளும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து அவனது நற்குணங் களைப் பற்றி நிரம்பவும் தங்களுக்குள் பாராட்டிப் புகழ்ந்தவர் களாய் இருந்தனர். அதன்பிறகு கலியாணசுந்தரம் ஒவ்வொரு நாளும் அந்த பங்காளவிற்கு வருவதும், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உறவினன் போல அவர்களோடு அன்னியோன்னியமாக இருப்பதும், அவர்களுக்குத் தேவையான சகலமான உதவிகளையும் செய்வதுமாக இருந்து வந்தான். ஆனால், அவன் அவர்களிடத்தில் பேசிக்கொண்டிருந்த போதாகிலும், அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்தபோதாகிலும், அவன் அவர்களது மனம் ஆயாசப்படும் படியான காரியங்களைச் செய்ததாவது கிடையாது. முதல் நாள் அவன் எவ்வளவு மரியாதையாகவும், நாணயமாகவும், அன்பாகவும் நடந்து கொண்டானோ, அதுபோலவே, அவன் ஒவ்வொரு நாளிலும் நடந்து கொண்டு, அவர்களது பிரியத்தையும் மதிப்பையும் கவர்ந்து கொண்டே வந்தான். அன்னியப் புருஷனான அவனோடு தாம் அதிகமாகப் பழகுகிறோமே என்ற சஞ்சலத்தை ஷண்முகவடிவு உணராது இருக்கும் படி அவன் அவ்வளவு நேர்த்தியாகவும், அதிகமாகக் கிட்ட நெருங்காமலும், தனது முழு அன்பையும் பட்சத்தையும் வார்த்தைகளில் காட்டாமல் செய்கைகளில் காட்டியும் அந்த யெளவனப் புருஷன் மிகவும் கம்பீரமாகவும் பெருந்தன்மையாகவும் நடந்து வந்தான். அவ்வாறு சில வாரங்கள் கழிந்தன. அதற்குள் ஷண்முகவடி வுக்கும், கமலத்துக்கும் கடிதப் போக்குவரத்துகள் நடந்து கொண்டே இருந்தன. இளய நங்கை கபடசாமியாரால் தனக்கு நேர்ந்த அபாயத்தின் விவரங்களையும், அந்த யௌவனப் புருஷர் நல்ல தருணத்தில் வந்து தன்னை மீட்டுவந்த விவரத்தையும் முதல் நாளே தனது அக்காளுக்கு எழுதிய விஷயம் முன்னரே குறிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு கலியாணசுந்தரம் என்னும் யெளவனப் புருஷரது