பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 85 உதவியால், தான் இழந்த பொருளை எல்லாம் திரும்பிப் பெற்றதையும், தன்னை வஞ்சித்து அழைத்துப் போன கபட சன்னியாசி அடிபட்டு ஒடிப்போனதையும், அதன்பிறகு அந்த யெளவனப் புருஷர் எவ்விதக் கைம் மாறும் கருதாமல் தங்களுக்குச் செய்துவரும் உதவிகளையும், அவரது குணாதிசயங்களைப் பற்றியும் ஷண்முகவடிவு என்னும் நற்குணவதி ஒளியாமல் தனது அக்காளுக்கு எழுதியனுப்பினாள். கமலம் எழுதிய கடிதங்களில் ஷண்முகவடிவிற்கு எச்சரிப்பாக பல புத்திமதிகளை அடிக்கடி எழுதிவந்தாள். அவள் எழுதிய கடிதங்கள் ஒன்றில் அடியில் வரும் குறிப்பு காணப்பட்டது: கலியாணசுந்தரம் என்பரைப் பற்றி நீ ஆதியிலிருந்து எழுதி வரும் விஷயங்களை எல்லாம் நான் நிரம்பவும் கவனமாகப் படித்து ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். நீ எழுதியுள்ள விவரங்களைப் படிக்க, நான் நேரில் அங்கே இருந்தால், எனக்கு விஷயங்கள் எவ்வளவு தெளிவாகத் தெரியுமோ அதற்குமேல் அதிகமாகத் தெரிகின்றன. அந்த யெளவனப் புருஷருடைய குடும்ப வரலாறுகள் என்ன என்பதை அவரிடம் கேட்டறிந்து கொள்ள நீங்கள் எத்தனிப்பது தகாத காரியம் என்று நீ நினைப்பது போல நானும் நினைக்கிறேன். அவருடைய குடும்ப வரலாறு எப்படி இருந்தாலும் அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவருடைய குணத்தழகையும் நடத்தை அழகையும் கேட்கக் கேட்க, அவர் உண்மையிலேயே தக்க பெரிய மனிதர்களுடைய வமிசத்தைச் சேர்ந்தவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்குகிறது. இப்பேர்ப்பட்ட நற் குணசீலர் நம்முடைய பங்களாவுக்கு வருவதனாலும், அவரிடம் நீங்கள் பற்பல உதவிகளை ஏற்றுக்கொள்வதனாலும், நமக்கு எவ்வித இழிவாவது, அவமானமாவது உண்டாகும் என்று நான் நினைக்கவில்லை. இருந்தாலும், உலகம் பொல்லாதது. நீ