பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 5 இனி எப்போதும் நடந்து கொள்ளுகிறேன். ஆனால், இப்போது மாத்திரம் தாங்கள் தங்களுடைய ஆவலை அடக்கிக் கொள்ள வேண்டுகிறேன். என்னுடைய வேலைக்காரிகள் வந்து விடப் போகிறார்களே என்று என்னுடைய உடம்பு நடுங்கு கிறது. போதும் போதும் நிறுத்துங்கள். அப்புறம் ஆகட்டும்' என்ற கெஞ்சிக் கூத்தாடினாள். அதைக்கேட்ட இளவரசர் மட்டுக்கடங்கா வேதனையும் மன எழுச்சியும் அடைந்து, மிக மிக உருக்கமாகவும் வாஞ்சை யாகவும் பேசத் தொடங்கி, 'ஆ பூர்ணசந்திரோதயம் என்னை நீ இப்படியும் கொல்லுவாயா இத்தனை நாளாக உன்னை நினைத்து நினைத்து என்னுடைய உயிரில் முக்கால் பாகமும் போய்விட்டது. இப்போது உன்னுடைய அருள் நோக்கம் எனக்கு ஏற்பட்டும், என் மனக்குறை தீரவில்லையே! உன்னுடைய உட்கருத்து இன்னதுதான் என்பதைச் சொல்லி விடு. நீ எனக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கப் போகிறாயா? அல்லது, நான் இப்படியே நரகவேதனைப்பட்டு மாண்டு போக விட்டுவிடப் போகிறாயா? என் கண்ணே! என் முத்தே! எங்கே நிஜத்தைச் சொல்லிவிடு' என்று கூறியவண்ணம் ஏங்கித் துரத்தில் நின்றார். உடனே பூர்ணசந்திரோதயம் அவருக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் உண்டாகும்படி வசீகரமாகப்பேசத் தொடங்கி, "நாம் இருவரும் ஒன்றுகூடி நீடித்த காலம் சந்தோஷமாக வாழ வேண்டும். அதற்கு நாம் எந்தக் காரியத்தையும் நல்ல சுபகாலத்தில் தொடங்க வேண்டும். இன்றைய தினம் நாள் நன்றாக இல்லை. நாளைய தினம் வெள்ளிக்கிழமை நல்ல சுபதினம். ஆகையால், நாளையதினம் ராத்திரி சரியாக ஒன்பது மணிக்கு இங்கே ஒரு பெட்டிவண்டி அனுப்பி வையுங்கள். அதில் ஏறிக்கொண்டு நான் நேராகத் தங்களுடைய அந்தப்புரத்துக்கு வந்து சேருகிறேன். என்னுடைய வண்டியில் நான் வந்தால், நான் இன்ன இடத்துக்குப் போகிறேன்