பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


86 பூர்ணசந்திரோதயம்-2 கலியாணமாகாத சிறிய பெண். அவரும் கலியாணமாகாத யெளவனப் புருஷர். ஏகாங்கியாக நீ இருக்கும் பங்களாவுக்கு அவர் அடிக்கடி வந்து உங்களோடு அன்னியோன்னியமாகப் பழகுவதை உலகத்தார் அறிந்தால், உன்னைப்பற்றித் தவறான அபிப்பிராயம் கொள்வார்கள். ஆகையால், நீ அவரிடம் அதிகமாக நெருங்கிப் பழகாமல் மரியாதையாகவும், மட்டாகவும் தூரத்தில் இருந்தபடி, அவரால் ஆகவேண்டிய சகாயம் ஏதாவது இருந்தால் அதை முத்தம்மாளைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்வதே உசிதமானது. குடும்ப ஸ்திரீகள் நடந்து கொள்ள வேண்டிய உத்தம லக்ஷணங்களை எல்லாம் நீ நன்றாக உணர்ந்த நற் குணமணி. ஆதலால், உனக்கு நான் எழுதக் கூடியது அதிகமாக ஒன்றும் இல்லை. நீ எவ்விதக் கெடுதலும் செய்து கொள்வாய் என்று நான் பயப்படவில்லை. உலகத்தாருடைய நச்சு வாக்குக்கே நான் நிரம்பவும் பயப்படுகிறேன். - என்ற குறிப்பு ஒரு கடிதத்தில் காணப்பட்டது. அதற்கு சொற்ப காலத்திற்குப் பிறகு கமலத்தினிடத்திலிருந்து ஷண்முகவடிவிற்கு வந்த இன்னொரு கடிதத்தில் அடியில் வரும் விஷயம் எழுதப்பட்டிருந்தது: இரண்டு தினங்களுக்கு முன்னால் நீ எனக்கு எழுதிய பிரியமான கடிதத்தில், கலியாணசுந்தரம் என்பவர் என்னுடைய மேல் விலாசத்தை எழுதிக் கொடுக்கும்படி சில தினங்களுக்கு முன் உன்னைக்கேட்டதாகவும், என்னகருத்தோடு அவர் என்னுடைய மேல் விலாசத்தைக் கேட்டாரோ என்று நீ ஆச்சரியம் அடைந்திருப்பதாகவும் எனக்கு எழுதியிருக்கிறாய். உன்னால் எனக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதம் என்னிடம் என்றையதினம் வந்து சேர்ந்ததோ அன்றைய தினமே அந்த யெளவனப் புருஷரிடத்திலிருந்தும் எனக்கு ஒரு கடிதம் கிடைத்திருக்கிறது. அந்தக் கடிதத்தில் அவர் எழுதியுள்ள விஷயங்களைப் படிக்கப் படிக்க என் மனதில் உண்டாகும்