பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


88 பூர்ணசந்திரோதயம்-2 கொண்டிருக்கிறார். அவர் எழுதியிருக்கும் மாதிரியிலிருந்தும், நீ அவரைப்பற்றிப் புகழ்ச்சியாகப் பல கடிதங்களில் எழுதி இருப்பதிலிருந்தும், உன்னை அவருக்குக் கட்டிக் கொடுத்து விடலாம் என்ற எண்ணம் என் மனசிலும் எழுகிறது. ஆனால், அவர்கருப்பாக இருப்பாரோ சிவப்பாக இருப்பாரோ என்பதுகூட எனக்குத் தெரியாது. நீ இந்த இரண்டு மாசகாலமாக அவரோடு பழகியிருக்கிறாய். அவருடைய அழகு, நற்குணம், யோக்கியதாபட்சம் முதலியவை உனக்குப் பிடித்து, உன் மனமும் அவரை விரும்புமானால், நீ அவரையே கலியாணம் செய்து கொள்வதைப்பற்றி எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். இன்றையதினம் நான் உனக்கு எழுதியதுபோல அவருக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறேன். அவர் பிரஸ்தாபித்துள்ள சங்கதியைப் பற்றி நான் நிரம்பவும் குதூகலமடைவதாகவும், அவருடைய யோக்கியதாபட்சத்தைப் பற்றியும் மேம்பாட்டைப் பற்றியும் நான் ஏற்கனவே கேள்வியுற்றிருப்பதால், இந்த ஏற்பாடு எனக்கு முற்றிலும் சம்மதமானதே என்றும், ஷண்முக வடிவுக்கு இந்த விஷயத்தில் பிரியமிருக்கும் பட்சத்தில், எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் அவருக்கு நான் மறுமொழி எழுதியிருக்கிறேன். ஆகையால், உனக்கு இஷடமிருக்கும் பட்சத்தில், அதை முத்தம்மாள் மூலமாக அவருக்குத் தெரிவித்து அதிகக் காலதாமதம் இன்றி ஒரு முகூர்த்தநாள் பார்த்து நிச்சயப்படுத்திக் கொண்டு எனக்கு எழுதியனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். மூத்தவளாகிய நான் கலியாணம் செய்து கொள்ளாமல் இருக்கையில் இளையவளான நீ கலியாணம் செய்து கொண்டால், ஊரிலுள்ளவர்கள் அதைப் பற்றிப் புரளி செய்வார்கள் என்று நீ ஒருவேளை யோசிக்கலாம். ஆனால், நாம் அநாதைகளாக இருப்பதுபற்றி பொருள், இடம், காலம் முதலியவைகளையே நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். இந்த யெளவனப் புருஷருடைய நட்பும் உதவியும் துணையும் இப்போது நமக்கு இன்றியமையாதன வாக