பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 89 இருப்பதாலும், எவ்வித உறவு முறைமையும் இல்லாத அன்னியரான அவரிடம் நாம் இப்போது இருப்பதுபோல எப்போதும் அன்னியோன்னியமாக இருப்பது ஏச்சுக்கு இடங்கொடுக்கும். ஆகையால், நீ முன்னால் உன்னுடைய கலியாணத்தை முடித்துக்கொள்வதே நமக்கு நிரம் பவும் rேமமான காரியமாகத் தோன்றுகிறது. ஆகையால், நான் கலியாணம் செய்துகொள்ளாமல் இருக்கிறேனே என்று நீ கொஞ்சமும் எண்ணவே வேண்டாம். அந்த விஷயம் நிற்க, இங்கே நான் இருக்கும் இடத்தில் நான் சந்துஷ்டியாகவும் சம்பிரமமாகவும் காலங்கழித்து வருகிறேன். நெடுங்காலமாகப் பணங்கொடுத்து நம்முடைய குடும்பத்தைக் காப்பாற்றி வந்த காருண்யவள்ளலான சோமசுந்தரம் பிள்ளை அவர்களும் அவர்களுடைய சம்சாரமும் என்னைவிட்டு ஒரு நிமிஷ நேரம் பிரிந்திருக்கச் சகியாதவர்களாக இருக்கிறார்கள். நான் ஏற்கெனவே எழுதியுள்ளபடி அவர்கள் என்னையே அபிமான புத் திரியாக ஏற்றுக்கொண்டு தங்களுடைய அபாரமான செல்வத்தையெல்லாம் எனக்கே கொடுத்து விடப் போவதாகச் சொல்லுகிறார்கள். அவர்களுடைய பொருளெல்லாம் நமக்கு வந்துவிடப் போகிறதே என்பதைக் கருதாவிட்டாலும் அவர்கள் நம்மைக் காப்பாற்றி இவ்வளவு தூரம் ஆளாக்கிய மாதா பிதாக்களாயிற்றே என்பதைக் கருதி நான் இப்போது அவர்களுடைய மனம்கோணாதபடி நடந்து கொள்ள வேண்டியவளாக இருக்கிறேன். என்னிடத்தில் அவர்கள் வைத்துள்ள அளவற்ற வாஞ்சையைப் பார்த்தால், உன்னுடைய கலியாணத்துக்குக் கூட என்னை அவர்கள் ஊருக்கு அனுப்ப மாட்டார்கள்போல இருக்கிறது. நான் வந்தாலும் வராவிட்டாலும், அது ஒரு முக்கியமான காரியமல்ல. நான் இங்கே வந்து இவர்களிடம் அகப்பட்டுக் கொண்டிருப்பதால், இனி நான் பழையபடி உங்களோடு வந்திருக்கவாவது உங்களுடைய சவரrணையைக் கவனிப்பதாவது முடியும்