பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பூர்ணசந்திரோதயம்-2 தன்னுடைய பங்களாவிற்குள் வருவானோ மாட்டானோ என்ற ஐயம் தோன்றியது. அவன் வந்தால், அதற்குமுன் தான் களங்கமற்ற மனத்தோடு, மறைவில் நின்றபடி, அவனது கனிமொழிகளைக் கேட்டு, அவனுக்கு மறுமொழி கூறி வந்ததுபோல, அன்றைய தினமும் செய்வதா என்ற கிலேசம் அப்போதே எழுந்து வதைக்கத் தொடங்கியது. அந்தக் கடிதம் வந்த காலத்தில் வேலைக்கார முத்தம்மாள் ஏதோ ஜோலியாக வெளியில் போயிருந்தவள் இரண்டொரு நாழிகை நேரத்தில் திரும்பி வந்து சேர்ந்தாள். அவள் வந்தவுடனே ஷண்முகவடிவு தனது அக்காளிடமிருந்து வந்திருந்த கடிதத்தை எடுத்துக் கொடுக்க, அவள் அதைப் படித்துப் பார்த்துவிட்டு ஆனந்தக்கூத்தாடி ஷண்முகவடிவு எப்படியாவது அந்த யெளவனப் புருஷரை மணந்து சந்துவிடியாக வாழ வேண்டும் என்று அவளை மனதார வாழ்த்தி ஆசீர்வதித்தாள். அந்தக் கலியான ஏற்பாடு அவள் எதிர்பார்க்காத புதிய ஏற்பாடல்ல; கலியாணசுந்தரம் பங்களாவிற்கு வந்து அவர்களோடு பழக ஆரம்பித்த பிறகு சில தினங்களுக்குள் முத்தம்மாளது மனதில் அந்த எண்ணம் தானாகவே உதித்தது. ஷண்முக வடிவும் கலியாணசுந்தரமும் கலியாணம் செய்து கொண்டால், அது நிரம்பவும் பொருத்தமாக இருக்குமென்ற யோசனை அவளது மனதில் எழுந்து வருத்திக் கொண்டே இருந்தது. ஆனால், அவர்களுள் எவரும் அதைப் பற்றி பிரஸ்தாபம் செய்யாது இருக்கையில் தானாக அதைப் பற்றிப் பேசுவது ஒழுங்கல்ல என்று நினைத்து, அவள் அதுவரையில் தனது விருப்பத்தை வெளியிடாமல் இருந்து வந்தாள். கமலத்தின் கடிதத்தைப் படித்தவுடனே, தான் எதிர்பார்த்த விஷயம், நேரப்போவதைக் கண்டு, அவள் மட்டுக்கடங்கா மகிழ்ச்சியும் குதுகலமும் அடைந்தவளாய், அந்தக் கலியாணத்தையும் கலியாண சுந்தரத்தின் குணாதிசயங்களைப் பற்றியும் பலவாறாகப் புகழ்ந்து பேசத் தொடங்கினாள். ஷண்முகவடிவிற்கு அந்த யெளவனப்